• Jan 19 2025

இப்போது சிங்கிள் தான்.. அடுத்த காதலுக்கு தயாராகிவிட்டேன்: உண்மையை ஒப்புக்கொண்ட ஸ்ருதிஹாசன்

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

நடிகை ஸ்ருதிஹாசன் ஏற்கனவே சில காதலில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் அவர் சாந்தனு என்பவரை காதலித்தார் என்றும், அதன்பின் அவரையும் பிரேக் அப் செய்து விட்டார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது தான் சிங்கிள் என்றும் அடுத்த காதலுக்கு தயாராகி விட்டேன் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் ஏற்கனவே சில நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார் என்றும் அதன் பிறகு அவர் சில காதலிலும் இருந்து வந்ததாக கூறப்பட்டது. சில காதல், கல்யாணம் வரை நெருங்கிய நிலையில் அதன் பின் பிரேக்கப் ஆனது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஸ்ருதிஹாசன், சாந்தனு என்பவரை காதலித்து வந்தார் என்பதும் இருவரும் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீரென ஸ்ருதிஹாசன் தனது காதலரின் பதிவுகளை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிய நிலையில்,  அவரை பிரிந்து விட்டதாக வெளிப்படையாக கூறவில்லை என்றாலும் இருவரும் தற்போது சந்தித்துக் கொள்வதில்லை என்று செய்திகள் வெளியானது. இந்த நிலையில்   கடந்த சில ஆட்களுக்கு முன்னர் சாந்தனு அளித்த பேட்டியில் ஸ்ருதிஹாசன் உடனான உறவு குறித்து  தான் பேச விரும்பவில்லை என்று கூறியதை அடுத்து இருவரும் பிரிந்து விட்டார்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று  நேற்று ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது ஒரு ரசிகர் ’உங்களது ரிலேஷன்ஷிப் குறித்து கூறுங்கள்’ என்று கேட்டார். அதற்கு ’இந்த கேள்விக்கு பதில் அளிக்க எனக்கு மகிழ்ச்சி இல்லை என்றாலும் இப்போது நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன், வேறு ஒருவருடன் மிங்கிளாக தயாராக இருக்கிறேன்’ என்று கூறியதோடு ’நான் வாழ்க்கையில் தற்போது சந்தோஷமாக இருக்கிறேன், என்னுடைய வேலையில் மட்டும் முழுமையாக கவனம் செலுத்த போகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். வேறு ஒருவருடன் மிங்கிளாக தயார் என்று கூறியதை அடுத்து இன்னொரு காதலுக்கு அவர் தயாராகி விட்டதாகவே கருதப்படுகிறது.

Advertisement

Advertisement