• May 04 2024

Bigg Boss season 7 இல் முக்கிய போட்டியாளராகக் களமிறங்கும் கயல் சீரியல் நடிகை

stella / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிக் பாஸ் இதுவரை 6 சீசன்கள் ஓடி முடிந்திருக்கிறது. தற்போது 7ம் சீசனை தொடங்க முதற்கட்ட பணிகளை செய்து வருகின்றனர்.

செட் வேலை ஒரு பக்கம் நடக்க, போட்டியாளர்களை தேர்வு செய்யும் இன்னொரு பக்கம் நடந்து வருகிறது. பல முக்கிய பிரபலங்களை ஷோவுக்கு கொண்டு வர குழுவினர் முயற்சியில் இருக்கின்றனர்.


மேலும் இந்த சீசனில்  இரண்டு பிக் பாஸ் வீடுகள் இருக்கும் என்றும், போட்டியாளர்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு தங்க வைக்க பட போகிறார்கள் என முன்பு தகவல் வெளியானது.அத்தோடு இந்த மாதம் இந்த நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கயல் சீரியல் கயலின் தோழியாக நேர்ஸ் வேலை செய்யும் அன்னபூரணி போட்டியாளராக பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இவர் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் பார்வையற்ற ஆசிரியையாக நடித்தார் .அதனைத் தொடர்ந்து தான் சீரியல்களில் நடித்து வருகின்றார்.


அவர் பிக் பாஸ் செல்வதாக தற்போது தகவல் பரவி வரும் நிலையில் அவர் ஷோவுக்கு வருகிறாரா இல்லையா என்பது விரைவில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement