• Sep 13 2024

கல்யாணத்திற்கு பின் மாஸ் கூட்டணியுடன் இணைந்த கவின் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் ஹரிஷ் கல்யாண்,இயக்குநர் இளன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா – பியார் பிரேமா காதலுக்குப் பின்னால் உள்ள குழு – ஸ்டார் என்ற படத்திற்காக மீண்டும் இணைவதாக டிசம்பர் 2020 இல் அறிவிக்கப்பட்டது.

சிகப்பு ரோஜாக்கலில் இருந்து கமல்ஹாசனின் தோற்றம் தளபதியிலிருந்து ரஜினிகாந்தின் தோற்றம் மற்றும் ஷாருக்கான் போன்ற மூத்த நடிகர்களின் ஐகான் தோற்றத்தை ஹரிஷ் மீண்டும் உருவாக்கும் பல ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன..அதன் பின் எந்த அப்டேட்டும் தரவில்லை..


மேலும் ஒரு சில அறிக்கைகள் படம் கிடப்பில் போடப்பட்டதாகக் கூறுகின்றது..தாமதமாக எலன் இந்த படத்தை மாற்ற உள்ளார் என்றும் நடிகர் கவின் படத்தில் ஹரிஷ் கல்யாணுக்குப் பதிலாக நடிக்கிறார் என்றும் தகவல்கள் உள்ளன.இந்த செய்தியை படக்குழு உறுதி செய்துள்ளது அது வைரலாகி வருகிறது..

கவின், இளன் மற்றும் யுவன் ஆகியோர் இணைந்து ஒரு Star சின்னத்தை உருவாக்கும் படி ஒரு புகை படத்தைக் வெளியிட்டுள்ளனர்.படத்தின் தலைப்புஇன்று மாலை 6 மணிக்கு போஸ்டர் மூலம் வெளியிடப்படும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.இதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.



Advertisement

Advertisement