• May 08 2024

கதிரவனுக்கு Poker Face இருக்கு அதனால அவர் தான் சரி- புது பிளான் போடும் ரச்சிதா மற்றும் அசீம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த வாரங்களில் நடத்தப்பட்ட பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க் உள்ளிட்ட இரண்டு டாஸ்க்குகள் காரணமாக கடந்த சில எபிசோடுகளில் பல போட்டியாளர்கள் மத்தியில் சண்டை வெடித்திருந்தது.

மேலும் பிக்பாஸ் வீட்டிலிருந்து இதுவரை சாந்தி, ஜி.பி முத்து அசல் கோலார், ஷெரினா மகாலக்ஷ்மி ஆகியோர் வெளியேறியுள்ளனர்.தொடர்ந்து, தற்போது ஒவ்வொரு போட்டியாளர்களும் மீண்டும் தங்களின் ஸ்டைலில் பிக்பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர்.


இதற்கிடையில், புதிய டாஸ்க்கின் காரணமாக இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீடு அரண்மனையாக மாறி இருக்கிறது,. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு கதாபாத்திரத்தை எற்றுள்ளனர். அவ்வகையில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டர், ராணியாக ரச்சிதா, படைத்தளபதியாக அசீம், அரசவை ஆலோசகராக (ராஜகுருவாக) விக்ரமன், இளவரசராக மணிகண்டா ராஜேஷ், இளவரசியாக ஜனனி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ராணி ரச்சிதா மற்றும் படைத் தளபதி அசீம் ஆகியோருக்கு ரகசியமாக கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் குறித்த காட்சிகள் இன்னும்  அதிகம் பிக்பாஸ் வீட்டிற்குள் சூட்டை அதிகரித்துள்ளது. அசீம் மற்றும் ரச்சிதா ஆகியோருடன் பேசும் பிக்பாஸ், இந்த ராஜ்யத்தின் ஒரு ராஜ ரகசியத்தை கூறுவதாக கூறி, கஜானாவில் செல்வங்கள் அனைத்தும் தீர்ந்து விட்டதாகவும், எனவே ராஜ வம்சத்தை சேர்ந்த பொருளை திருடி கஜானாவில் சேர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறார். அசீம் மற்றும் ரச்சிதா ஆகியோருக்கு மட்டுமே இந்த விஷயம் தெரியும் என்பதை மாறி மாறி உணர்த்த இருவர் கையிலும் பாதி பாதி மேப் ஒன்றை கொடுத்து அவர்களை ஒருவருக்கு ஒருவர் அடையாளம் காணவும் பிக்பாஸ் உதவுகிறார்.


இதனைத் தொடர்ந்து கஜானாவில் பொருட்கள் சேர்ப்பது குறித்தும் அசீம் மற்றும் ரச்சிதா ஆகியோர் திட்டம் போடுகின்றனர். இதற்காக சக போட்டியாளர் ஒருவரை தங்களுடன் ரகசியமாக சேர்க்கவும் அவர்கள் திட்டம் தீட்டுவதாக தெரிகிறது. அந்த வகையில், கதிரவனை தங்கள் அணியில் சேர்க்கலாம் என்றும் அவரிடம் ஒரு Poker Face இருப்பதால், மற்றவர்களிடம் மாட்டிக் கொள்ள மாட்டார் என்பதையும் அசீம் ரச்சிதாவிடம் விளக்குகிறார்.

கஜானாவின் பெயரில் ரகசிய டாஸ்க் ஒன்றை பிக்பாஸ் அரங்கேற்றி உள்ளதால் நிச்சயம் இது பெரிய அளவில் விறுவிறுப்பையும் அதே சமயத்தில் ரணகளத்தையும் உண்டு பண்ணும் என்றும் பார்வையாளர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்


Advertisement

Advertisement

Advertisement