• May 12 2024

சிம்புவோடு இல்லை சூர்யாவோடு தான்- அஜித்தும் லிட்ஸ்டில் இருக்கின்றார்-சுதா கொங்கராவின் அடுத்த படத்தில் நடிக்கப் போவது இவர் தானா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பெண் இயக்குநராக இருந்தாலும் ஆண்களுக்கு நிகராக சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய முக்கிய இயக்குநராக இருப்பவர் தான் சுதா கொங்கரா. இவர் இறுதிச் சுற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக என்ட்ரி கொடுத்தார்.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான சூரைப்போற்று படத்தை இயக்கியிருந்தார். இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருந்ததோடு 5 தேசிய விருதுகளையும் வென்றுள்ளது. இதனால் இந்திய சினிமாவின் கவனம் முழுவதும் சுதா கொங்கரா மீது தான் உள்ளது.

அந்த நிலையில் சுதா தற்பொழுது சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார். அக்ஷய் குமார் லீட் ரோலில் நடிக்கும் இந்த படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தான் தயாரிக்கிறது.

இதற்கிடையில் சூரரைப் போற்று படம் தேசிய விருதுகளை அள்ளி குவித்ததால் சுதா கொங்கராவை பல சேனல்கள் பேட்டி எடுத்து வருகின்றன. அப்போது அவரிடம் நீங்க அடுத்ததாக யாரை வைத்து பேட்டி எடுக்கப் போகின்றீர்கள் எனக் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், சிம்புவை இயக்க போவதாக வந்த வதந்திகளை நானும் கேட்டேன். தற்போது சிம்புவுடன் நான் பணியாற்றவில்லை. அடுத்ததாக சூர்யா படத்தை தான் நான் இயக்க போகிறேன். தற்போது நாங்கள் இருவரும் கமிட்டாகி உள்ள படங்களை முடித்த பிறகு தான் சூர்யா 43 வேலைகள் எப்போது துவங்கப்படும் என முடிவு செய்யப்படும் என்றார்.

கதைக்கு தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே சில விஷயங்களை சேர்ப்போம். சண்டைக்கட்சிகளும் கூட தேடைப்பட்டால் தான் சேர்ப்பேன். தென்னிந்தியாவில் உருவான முதல் மூன்று பெண் டாக்டர்களின் கதையை படமாக உருவாக்க போகிறேன். இதுவும் உண்மை சம்பவ அடிப்படையிலானது தான். இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றார்.

நீங்கள் கதை தயாரிக்கும் போது ஹீரோவை மனதில் வைத்து, அவருக்கானது என முடிவு செய்து தான் கதை எழுதுவீர்களா என கேட்கப்பட்டது. இதற்கு சற்றும் தயக்கமின்றி உடனடியாக பதிலளித்த சுதா கொங்கரா, நான் ஒரு போதும் அப்படி செய்வதில்லை. உதாரணமாக சூரரைப் போற்று படத்தில் சூர்யா, புகைபிடிப்பது போன்ற ஒரு காட்சி உள்ளது. ஆனால் நிஜத்தில் சூர்யா புகைபிடிக்க மாட்டார். கெட்ட வார்த்தை பேசுவது போன்ற சீனும் உள்ள
அதே சமயம் சமீபத்தில் பிரஷ் மீட் ஒன்றில் பேசிய சுதா கொங்கரா, அஜித் உடனான படம் பற்றி கேட்டதற்கு நிச்சயம் பண்ணுவோம். ஒவ்வொன்றாக செய்வோம்.ஒரு படத்தை முடிக்க எனக்கு 3 வருடங்கள் தேவைப்படுகிறது. ஒரு படத்தை முடித்த பிறகு தான் மற்றொரு படத்தை துவக்க முடியும் என்றார். இதனால் சுதா கொங்கரா - அஜித் படமும் கன்ஃபார்ம் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement