• May 05 2024

இறந்த மகள் தூரிகை பற்றி கவிதையில் உருகிய கபிலன்...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவரான, கபிலன் மகள் தூரிகை சமீபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்த நிலையில், தற்போது தன்னுடைய மகள் பற்றி உருக்கமாக அவர் பிரபல வார இதழில் எழுதியுள்ள கவிதை படிப்பவர்கள் கண்களை கலங்க வைத்துள்ளது.

 மேலும் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லமாலம், தன்னுடைய திறமையால் பாடல் எழுதும் வாய்ப்பை பெற்று, பல சூப்பர் ஹிட் பாடல் பாடல்களை எழுதியுள்ளவர் கபிலன்.அத்தோடு  100க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள இவர், பொன்னியின் செல்வன் படத்தில் கூட ஒரு பாடலை எழுதியுள்ளார். இவ்வாறுஇருக்கையில் இவரது மகள் தூரிகை சமீபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


27 வயதாகும் தூரிகை பிரபல ஆங்கில மேகஸீனில் எழுத்தாளராகவும், ஆடை வடிவமைப்பாளராகவும் இருப்பது மட்டும் இன்றி... பெண்களுக்கான ஆன்லைன் இணையதள வார இதழ் ஒன்றையும் நடத்தி வருகிறார். மிகவும் தைரியமான பெண்ணான இவரே, தற்கொலை  எதிராக சில கட்டுரைகளை எழுதியுள்ள நிலையில், அப்படி ஒரு முடிவை எடுக்க என்ன காரணம் என பலரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தார்கள்.


அத்தோடு  இவரது தற்கொலை குறித்த முதல் கட்ட விசாரணையில், இவரது வீட்டில் பெற்றோர் திருமணம் செய்து கொள்ள கூறி வற்புறுத்தியதால் இந்த முடிவை எடுத்தார் என கூறப்படுகிறது. 'தூரிகை' இரண்டு ஓரிரு வாரங்கள் ஆகும் நிலையில், பிரபல வார இதழில் தன்னுடைய மகள் பற்றி, கவிதையால் கபிலன் உருகியுள்ளார். 


அந்த கவிதை தொகுப்பு....


எல்லா தூக்க மாத்திரைகளையும் 

அவளே போட்டுக் கொண்டால் 

நான் எப்படி தூங்குவேன்..!


எங்கே போனாள்  

என்று தெரியவில்லை 

அவள் காலனி மட்டும் 

என் வாசலில்..!


மின் விசிறி 

காற்று வாங்குவதற்கா.. 

உயிரை வாங்குவதற்கா..?


அவள் கொடுத்த 

தேனீர் கோப்பையில் 

செத்து மிதக்கிறேன் 

எறும்பாய்..?


அவளுக்கு 

கடவுள் நம்பிக்கை 

இருக்கா இல்லையா 

எனக்குத் தெரியாது 

அவளே என் கடவுள்..!


குழந்தையாக 

அவளை பள்ளிக்குத் தூக்கிச் சென்ற 

பாரம் இன்னும் வலிக்கிறது.

கண்ணீர் துளிகளுக்குத் தெரியுமா 

கண்களின் வலி.


யாரிடம் பேசுவது 

எல்லா குரலிலும் 

அவளே பதிலளிக்கிறாள்.


கண்ணீரின் வெளிச்சம் வீடு 

முழுக்க நிரம்பி இருக்க

இருந்தாலும் இருக்கிறது

இருட்டு.


பகுத்தறிவாளன் 

ஒரு கடவுளை 

புதைத்து விட்டான்..!


Advertisement

Advertisement

Advertisement