• May 03 2024

அபிக்காக தனது தாயை எதிர்க்கத் துணிந்த வெற்றி... துணைக்கு போக முடிவெடுத்த கபிலன்.. அதிரடித் திருப்பங்களுடன் 'தென்றல் வந்து என்னைத் தொடும்'..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும். அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது.

அதில் வெற்றியின் அண்ணன் வெற்றியிடம் "ஊர்ல உள்ள அத்தனை பங்காளிகளும் நேரில் வந்து அழைச்சிட்டு போனாங்களா இல்லையா" என்கிறார். பதிலுக்கு வெற்றி "அண்ணா நான் உங்க கூட வர முடியாது கார் புக் பண்ணி வந்திடுறேன், அப்புறம் நானே உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் என்று இருந்தேன் அபியும் திருவிழாக்கு வர்றா" என்கிறார்.


பதிலுக்கு அண்ணன் "அபிக்கு முதல் மரியாதை கொடுத்தால் அம்மா எப்படி ஒத்துக்குவாங்க" என்கிறார். அதற்கு வெற்றி "அப்பாவோட வாக்கு ரொம்ப முக்கியம், கடைசியாக அவரு அபிக்கு முதல் மரியாதை கிடைக்கணும் என்று ஆசைப்பட்டு சொல்லிட்டு போயிருக்காரு" என்கிறார். பதிலுக்கு அண்ணணும் அதெல்லாம் சரி அம்மாவை எப்படி சமாளிக்கப் போகிறாய் எனக் கேட்கின்றார். அபிக்கு முதல் மரியாதை கிடைக்கப்போகிறது என்பதை அம்மா கிட்ட இருந்து மறைத்திடலாம் என்கிறார் வெற்றி.  


மறுபுறம் கபிலன் அபியிடம் "கிளம்பிட்டியா, நானும் துணைக்கு வருகிறேன்" எனக் கேட்கின்றார். பதிலுக்கு அபி "நாளைக்கு மத்தியானத்திற்கு பிறகு லீவு கேட்டிருக்கன், நான் தனியாகவே போறேன், பரமு கேஸ் தான் நம்ம கிட்ட இருக்கிற ஒரு பெரிய சாலஞ் ஆக இருக்கு, இந்த கேசில் நாம கண்டிப்பா வின் பண்ணியே ஆகணும்" என்கிறார்.

இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement