ஷங்கர் தயாரிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்த game changer படத்திற்கு லைகா நிறுவனம் ரெட் கொடுத்து வெளியீட்டினை தடை செய்திருந்தது.இந்நிலையில் தற்போது சில பேச்சு வார்த்தைகளின் பின் பட வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது கமல்,ஷங்கர் ஆகிய இருவருடனும் கலந்து பேசி லைகா நிறுவன உரிமையாளர் தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது.என்னவெனில் கமல் இந்தியன் 3 படத்தினை முடித்து தந்த பின்னரே ஏனைய படங்களில் நடிப்பதாகவும் மற்றும் ஷங்கர் இதுவரை எடுத்து முடித்த பகுதிகளை போட்டு கட்டுவதற்கும் அதில் ஏதும் மாற்றங்கள் நீங்கள் சொல்ல கூடாது என்றும் கூறி பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளது.
அதன் பின்னர் சுமுகமான முறையில் கேம் சேஞ்சர் படத்தின் வெளியீட்டிற்கு லைகா நிறுவனம் அனுமதி அளித்திருப்பதாக சினிமா வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளதுடன் இப் படத்தின் பொங்கல் வெளியீடும் உறுதி செய்யப்பட்டுள்ளது.கிட்டத்தட்ட 500 திரையரங்குகளில் இப் படம் வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!