• May 09 2024

4 மாதங்களில் 4 படங்களின் படப்பிடிப்பு.. இதற்கிடையில் அரசியல் வேறு.. செம்ம பிஸியில் கமல்ஹாசன்..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் அடுத்து வரும் 4 மாதங்களில் 4 படங்களின் படப்பிடிப்புகளில் மாறி மாறி கலந்து கொள்ள இருப்பதாகவும் அது மட்டும் இன்றி தேர்தல் நெருங்கி வருவதை ஏற்று தேர்தல் பணிகளையும் கவனிக்க இருப்பதாகவும் கூறப்படுவதால் அவர் இன்னும் சில மாதங்களுக்கு செம பிஸியாக இருப்பார் என தெரிகிறது.

நடிகர் கமல்ஹாசன் ’இந்தியன் 2’ என்ற படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்ட நிலையில் அடுத்ததாக ’இந்தியன் 3’  திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். இந்த படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

இதனை அடுத்து அவர் ’கல்கி 2898 ஏடி’ என்ற படத்தின் படப்பிடிப்பில்  இம்மாத இறுதியில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிகிறது. அதன் பின்னர் மார்ச் மாதம் கமல்ஹாசன் நடித்துவரும் இன்னொரு படமான ’தக்ஃலைப்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.



சென்னையில் தக்ஃலைப் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அதன் பிறகு ஏப்ரல் மாதம் இதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு செர்பியா நாட்டில் நடைபெற இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதம் அன்பறிவ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் தக்ஃலைப், கல்கி 2898ஏடி,  இந்தியன் 3 மற்றும் அன்பறிவ் படம் என நான்கு படங்களில் அடுத்து வரும் நான்கு மாதங்களில் பிஸியாக இருப்பார் என தெரிகிறது.

அதுமட்டுமின்றி வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அது குறித்த பணியையும் அவர் பார்க்க வேண்டியது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement