• Jan 18 2025

கமல்ஹாசனுடன் நெருக்கமாக த்ரிஷா.. இதெல்லாம் எங்கே போய் முடிய போகிறதோ?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் சிம்பு மற்றும் த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியானது.

மேலும் இந்த படப்பிடிப்பில் தற்போது கமல்ஹாசன் இணைந்துள்ளதாக கூறப்படும் நிலையில் கமல்ஹாசன், சிம்பு  மற்றும் த்ரிஷா ஆகிய மூவரும் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் படப்பிடிப்பின் இடைவேளையில் கமல்ஹாசனுடன் நெருக்கமாக இருக்கும் த்ரிஷாவின் புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது என்றாலும் கமல்ஹாசன் நெருங்கிய உறவினர் கேரக்டரில் தான் த்ரிஷா நடித்து வருகிறார் என்பதும் அதனால்தான் மூவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படப்பிடிப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ’மன்மதன் அம்பு’ ’தூங்காவனம்’ உள்ளிட்ட படங்களில் கமல்ஹாசன், த்ரிஷா இணைந்து நடித்த நிலையில் மீண்டும் இருவரும் ஒரே படத்தில் இணைந்துள்ளதை அடுத்து இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதேபோல் ’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு மற்றும் த்ரிஷா ஜோடியாக நடிப்பதும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், அலி ஃபைசல், பங்கஜ் திரிபாதி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement