• May 07 2024

படம் ஆரம்பிப்பதற்கு முன்னரே பிரபல இயக்குநருக்கு சொகுசுகார் வழங்கிய கமல்ஹாசன்-யாருக்கு தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளுடன் வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

கமல்ஹாசன் நடிப்பில் 4 வருடத்திற்கு வெளியாகிய இப்படம் வசூல் ரீதியாக மட்டுமல்லாது வசூல் ரீதியாகவும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தற்போது சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.


 இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கமல் எச் .வினோத் இயக்கத்தில் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.இந்த கூட்டணி உருவாவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் நடிகர் கமல் எச் வினோத் அவர்களுக்கு சொகுசு கார் ஒன்றை பரிசளித்திருப்பதாக சொல்லப்படுகிறது.


படம் தொடங்குவதற்கு முன்னரே இவர் சொகுசு கார் வழங்கியுள்ள பேச்சு தான் தற்போது கோலிவுட் சினிமாவில் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது.மேலும் எச். வினோத் இறுதியாக நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த துணிவு படத்தை இயக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement