• Jul 07 2024

கூல் சுரேஷை கிண்டலடித்த கமல்ஹாசன்..! வெட்கத்தில் தலைகுனிந்த ரவீனா! வெளியான பரபரப்பு ப்ரோமோ

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது மேலும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிது. எனினும், அனன்யா ராவ், பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளனர்.

மேலும், பிக்பாஸ் வரலாற்றில் இம்முறை  மேலும் ஐந்து பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர்.


இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பில் வெளியான ப்ரோமோவில், 'எதனால வீடு பாய்ந்திர்கள்' என கமல் கூல் சுரேஷை பார்த்து கேள்வி எழுப்ப,  'உடம்பு சரில சார். அதனால தான்' என்று இழுக்க... 'ரொம்ப முடியல என்டா இங்க என்ட இடத்துக்கு வந்துடுறிங்களா?' என கமல் கலாய்த்ததை இந்த ப்ரோமோவில் பார்க்க முடிந்தது.

மேலும், பேசிய கமல்ஹாசன், சாப்பாடு விஷயம் போலவே அடுத்தடுத்த விதிமுறைகள் கடுமையாகலாம் என்பதை கோடிட்டு பேசியுள்ளார். '

இதேவேளை, பிக்பாஸ் விதிமுறைகளை மீறினால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கமல் எச்சரித்துள்ளமை சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.





 

Advertisement

Advertisement