• Jul 16 2024

இந்தியன் 2 படத்தை பல அரசியல்வாதிகள் பயன்படுத்தலாம் - கமல்

Nithushan / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சமீப காலமாக திரைப்படங்களின் அடுத்த பாகங்கள் வெளியாகுவது அதிகரித்துள்ளது. அவ்வாறே கமல் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளியாகி ஹிட் கொடுத்த  இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது.



லைக்கா தயாரிப்பில் சங்கர் இயக்கும் திரைப்படம்  இந்தியன் ஆகும். குறித்த திரைப்படத்தில் கமல் ஹாசனுட இணைந்து சித்தார்த் , எஸ்.ஜே. சூர்யா , ரகுல் ப்ரீத் சிங் , பாபி சிம்ஹா , விவேக் , பிரியா பவானி ஷங்கர் , குல்ஷன் குரோவர் , சமுத்திரக்கனி ஆகியோரும் நடிக்கின்றனர்.



இந்த நிலையிலேயே சமீபத்தில் குறித்த படத்தின் ப்ரோமோஷனுக்காக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.அதில் கமல் கூறுகையில் "  இந்தியன் 2 படத்தை நான் மட்டுமல்ல, பல அரசியல் கட்சிகள் பயன்படுத்தலாம். படத்தில் அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது" என கூறியுள்ளார் .


Advertisement

Advertisement