• May 04 2024

அந்த ஒற்றை வார்த்தையால் ட்ரெண்டிங்கில் இணைந்த கமல்ஹாசன்... அட அதுக்கே இவ்வளவு பவரா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

உலகம் பூராகவும் உள்ள மக்களிடையே வெகு விரைவாக செய்திகளைக் கொண்டு சென்று சேர்க்கின்ற முக்கியமான ஊடகமாக சமூக வலைத்தளங்கள் விளங்கி வருகின்றன. இவ்வாறான சமூக வலைதளங்களில் பேமஸ் ஆன ஒன்று ட்விட்டர். 

உலகில் இடம்பெறும் நிகழ்வுகள் முதல் உள்ளூரில் இடம்பெறும் நிகழ்வுகள் வரை இதில் பதிவிட்டால் அது சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த ட்விட்டரில் தற்போது 'ஒரு வார்த்தை டுவிட்' என்ற விடயம் ஆனது டிரெண்டிங்கில் உள்ளது. 


அதாவது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடங்கி வைத்த இந்த டிரெண்ட் ஆனது தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது. அத்தோடு இந்த ஒரு வார்த்தை ட்விட்டை இந்தியாவின் தமிழ்நாட்டில் பிரபலமாக்கியது என்றால் அது அரசியல் கட்சிகள் தான். 

அந்தவகையில் முதலில் அ.தி.மு.க தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் 'எடப்பாடியார்' எனப் பதிவிட, அதற்கு போட்டியாக தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த டிரெண்டில் இணைந்துவிட்டன. குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 'திராவிடம்' என பதிவிட்டே இந்த டிரெண்டில் இணைந்தார். 


அவரைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி தலைவரான சீமான் 'தமிழ் தேசியம்' என்றும், தமிழக பா.ஜ.க தலைவரான அண்ணாமலை 'தமிழன்' என்றும் தமது பதிவுகளைப் பதிவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் தற்போது புதிதாக இந்த டிரெண்டில் இணைந்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 'மக்கள்' எனப் பதிவிட்டு இருக்கிறார். அவரின் இந்த ட்விட்டர் பதிவானது ஏனைய சமூக வலைத்தளப் பக்கங்களிலும் வைரலாகி வருகிறது. 


கமல்ஹாசனின் இந்தப் பதிவிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஏராளமானோர் தமது லைக்குகளை குவித்து வந்தாலும், மறுபுறம் சிலர் கடுமையான விமர்சனங்களால் விமர்சித்தும் வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன் பதிவிட்ட 'மக்கள்' என்பதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘அடிக்கடி அவர்களை சந்திக்க வேண்டும்’ என நெட்டிசன்கள் சிலர் கமெண்ட் செய்து உள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement