• May 06 2024

லியோ படத்திற்காக கமல்ஹாசன் இதை பண்ணலையா?- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்

stella / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது சென்னை ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. லோகேஷ் இயக்கத்தில் இதற்கு முதல் விக்ரன் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது.இப்படத்தில் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற ஒன்றை தொடங்கினார். 

அதன்படி அதற்கு முன்பு வெளிவந்த “கைதி” திரைப்படத்தின் ரெஃபரன்ஸ் “விக்ரம்” திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது. அதே போல் “லியோ” திரைப்படமும் லோகேஸ் சினிமாட்டிக் யுனிவர்ஸிற்குள் இடம்பெறுமா? என்று ரசிகர்களிடையே கேள்வி எழுந்து வருகிறது.


அதன்படி “லியோ” திரைப்படத்தில் கமல்ஹாசன் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகிற 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு “லியோ” திரைப்படத்தின் டீசர் வெளிவரவுள்ளது எனவும் அந்த டீசருக்கு கமல்ஹாசன் வாய்ஸ் ஓவர் கொடுக்கவுள்ளார் எனவும் ஒரு தகவல் வெளிவந்தது. 

இந்த நிலையில் சமீபத்தில் தனது வலைப்பேச்சு வீடியோவில் மூத்த பத்திரிக்கையாளரான பிஸ்மி, இது குறித்து ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது “லியோ” டீசர் விஜய்யின் பிறந்தநாளுக்கு வெளிவரவுள்ளதாக வெளிவந்த தகவலும் கமல்ஹாசன் அந்த டீசருக்கு வாய்ஸ் ஓவர் கொடுக்கவுள்ளார் என்ற தகவலும் முழுக்க முழுக்க வதந்தி என்று கூறியுள்ளார். 


மேலும் லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement