• Mar 12 2026

Jovika-வுக்கு அறிவே இல்லை விழுந்து அடி பட்டா தான் புத்தி வரும்"- கோவப்பட்டு பேசிய வனிதா விஜயகுமார்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் இப்போது எட்டாவது வாரம் நடந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 50 நாட்களை முடித்து இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் பொறுமையாக சென்று கொண்டிருக்கிறது. 

இதற்கு முன்னால் நடந்த சீசன்களில் இருந்தது போல கட்டினமான டாஸ்குகளும் கான்ட்ரோவர்சிகளும் இந்த சீசனில் கொஞ்சம் குறைவாக தான் இருக்கிறது.இந்த சீசன் பொருத்தவரையில் எதிர்பார்க்காத பல விஷயங்கள் நடந்திருக்கிறது. ரெட் கார்டு தொடங்கி வைல்ட் கார்டு வரை இப்போது மீண்டும் பூகம்பமாக வரப்போகும் வைல்ட் கார்ட் என அனைத்துமே எதிர்பார்க்காத ஒன்றுதான்.


 50 நாட்கள் நிறைவடைந்திருக்கும் இந்நிலையில் பைனலில் யார் யார் நிற்பார்கள் என கொஞ்சமும் கணிக்க முடியவில்லை என ரசிகர்கள் கருத்துக்கள் தெரிவிக்கிறார்கள்.இதில் முக்கிய போட்டியாளராகக் கலந்து கொண்டிருப்பவர் தான் நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா.

இவர் இந்த நிகழ்ச்சியில் அடிக்கடி வழுக்கி விழுந்து கொண்டிருக்கின்றார்.எனவே இது குறித்து வனிதா கூறியுள்ளார். அதாவது ஜோவிதா நன்றாக ஓடுவார். வீட்டில் கூட நடந்து போக மாட்டார். ஓடித் தான் போவாள்,நான் திட்டுவேன் ஓடிப் போகாத சறுக்கி விழுந்திடுவ என்று ஆனால் அவ கேட்கமாட்டாள்.


அதே மாதிரி தான் அங்க பண்ணிட்டு இருக்கிறாள்,விழட்டும் நல்லா, விழுந்து அடிபட்டால் தான் புத்தி வரும் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement