• May 04 2024

ஜான் விஜய்க்கு சினிமா நடிகை போல் ஒரு மனைவியா... இதோ இதுவரை யாருமே பார்த்திடாத புகைப்படம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவைப் பொறுத்தவரை நடிகர், நடிகைகளுக்கு எளிதில் மக்கள் மத்தியில் பிரபல்யம் கிடைத்து விடும். ஆனால் அதையும் தாண்டி மக்களிடையே பிரபலமாவது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல.

அந்த வகையில் வில்லன், காமெடி கலந்த வில்லன், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்து கேரக்டரிலும் வேற லெவலில் நடித்து மிரட்டியிருப்பவர் தான் பிரபல முன்னணி நடிகர் ஜான் விஜய்.


இவர் தனது திரைபயணத்தை ரேடியோ ஜக்கியாக ஆரம்பித்து அதன் பின்னர் பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து அதன் மூலம் மக்கள் மத்தியில் தன்னை நடிகராக அடையாளபடுத்தி கொண்டவர். அதிலும் குறிப்பாக வில்லன் கதாபாத்திரத்தில் தனது முரட்டு தனமான நடிப்பால் நம்மை மிரள வைத்திருப்பார். 

அதேபோல் காமெடி என்றால் வேற லெவலில் நகைச்சுவை கேரக்டரில் நடித்து அசத்தி இருப்பார் அந்த வகையில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றாற்போல் தனது பாணியை மாற்றிகொண்டு அதில் தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் ஜான் விஜய்.


மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களிலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வாறு திரையுலகில் மிகப் பிரபலமாக இருக்கும் ஜான் விஜயின் மனைவி யாரென தெரியுமா? அவர் வேறு யாரும் இல்லை பிரபல அரசியல் வாதியின் மகளானா மாதவி இளங்கோவன் என்பவர் தான்.


இவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் ஜான் விஜய். மேலும் இத்தம்பதியினருக்கு ஒரு மகனும் உள்ளார். இவர்களது திருமணம் படங்களில் வருவது போல் பல தடைகளுக்கு பின்னர் தான் நடந்தது என பல முறை பேட்டிகளில் கூறியுள்ளார் ஜான் விஜய்.

இந்நிலையில் இவரின் குடும்பப் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement