• Apr 27 2024

வாரிசு பட 'ஜிமிக்கி பொண்ணு' வீடியோ பாடல்.. ஒரே நாளில் எவ்ளோ வியூஸ் தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மாதம் பொங்கலையொட்டி வெளியானது வாரிசு படம்.

தெலுங்கின் பிரபல இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை தில் ராஜூ தயாரித்திருந்தார்.இந்தப்படத்தின் வசூல் 300 கோடி ரூபாய்களை எட்டிய நிலையில், தற்போது விஜய் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் விஜய்யின் வாரிசு படம் கடந்த மாதம் 11ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

படத்தில் விஜய்க்கு ராஷ்மிகா மந்தனா ஜோடியாகியிருந்த நிலையில், ஷாம், பிரபு, சரத்குமார், யோகிபாபு, ஜெயசுதா உள்ளிட்டவர்கள் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

பேமிலி சென்டிமெண்ட் கேரக்டரில் விஜய் நடித்து நீண்ட நாட்கள் ஆகியிருந்த நிலையில், தளபதி 67 போன்ற ஒரு அழுத்தமான கதையில் நடிப்பதற்கு முன்னதாக லைட்டான இந்த கதைக்களத்தை அவர் தேர்ந்தெடுத்தது சிறப்பாக பார்க்கப்பட்டது. ரசிகர்களும் இந்தப் படத்தை கொண்டாடினர்.

ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கிடையில் பான் இந்தியா படமாக இந்தப் படம் ரிலீசானது. புஷ்பா படத்திற்கு பிறகு பான் இந்தியா ஸ்டாராக ராஷ்மிகா மாறியுள்ள நிலையில், அவர் இந்தப் படத்தில் நடித்திருந்தது படத்தின் சக்சசிற்கு ஒரு காரணமாக பார்க்கப்பட்டது. நடிகர் விஜய் எப்போதும்போல, ஆக்ஷன், காமெடி உள்ளிட்டவற்றையும் தூக்கலாக கொடுத்திருந்தார்.

தமன் இசையில் படத்தின் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்த நிலையில், முன்னதாக படத்தின் லிரிக் வீடியோ பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்நிலையில், தற்போது படத்தின் ஜிமிக்கி பொண்ணு பாடலின் வீடியோ வெளியாகி  நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பாடலில் விஜய் மற்றும் ராஷ்மிகாவின் நடனம் மற்றும் கெமிஸ்ட்ரி சிறப்பாக பார்க்கப்படும் நிலையில், பாடல் வெளியான ஒரே நாளில் 25 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது. பாடலை இசையமைப்பாளர் அனிருத் -ஜோனிதா காந்தி பாடியுள்ள நிலையில் பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார்.

பாடலுக்கு ஷோபி மாஸ்டர் நடனம் அமைத்துள்ள நிலையில், வழக்கம்போல விஜய் இந்தப் பாடலில் நடனத்தில் ஹிட் கொடுத்தருந்தார் . இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் வாரிசு படக்குழு  கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement