• Jan 19 2025

மேட்சை யாருமே பாக்கல.. மஞ்சள் காஸ்ட்யூமில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா ஆனந்த்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியை பார்க்க ஏராளமான தமிழ் திரை உலக நட்சத்திரங்கள் வருகை தந்து இருந்த நிலையில் யாஷிகா ஆனந்த் கவர்ச்சி மஞ்சள் காஸ்ட்யூமில் வந்திருந்து ரசிகர்களை குஷி ஆக்கினார். 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு  பெரிய அளவில் வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்த யாஷிகா ஆனந்துக்கு ஒரு சில வாய்ப்புகள் தான் கிடைத்தது என்பதும் ஆனால் அந்த வாய்ப்புகளும் அவருக்கு பெரிய அளவில் திரையுலகில் கை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனை அடுத்த இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வாய்ப்புகளை தேடி வரும் யாஷிகா, நேற்று நடந்த சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியை பார்க்க சேப்பாக்கம் மைதானத்திற்கு கிளாமர் மஞ்சள் உடையில் அவர் வருகை தந்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. 

ஒவ்வொரு முறையும் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்கும் போது யாஷிகா குதித்து தனது கையில் உள்ள கொடியை காட்டி உற்சாகத்தை கொடுத்த நிலையில் பலர் மேட்சை பார்க்காமல் யாஷிகாவையே பார்த்துக் கொண்டிருந்தனர் என்பதும் அந்த அளவுக்கு அவர் குஷியாக இருந்தார் என்பதை பார்க்க முடிந்தது.

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தனது கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப்போட்ட யாஷிகா இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அவை தற்போது வைரல் ஆகி வருகிறது.



Advertisement

Advertisement