• May 03 2024

’கண்ணை நம்பாதே’ படத்தில் ஜெயலலிதாவின் காட்சியா?- சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த இயக்குநர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் உதயநிதி நடிப்பில் இன்றைய தினம் வெளியாகியுள்ள திரைப்படம் தான் கண்ணை நம்பாதே. இயக்குநர் மு.மாறன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இதில் ஆத்மிகா, சதீஷ், பூமிகா சாவ்லா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா உட்பட பலர் நடித்துள்ளனர். சித்துக்குமார் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை லிப்பி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித்குமார் தயாரித்துள்ளார்.


தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் உதயநிதி ஸ்டாலின், பிரசன்னாவுடன் ரூம்மெட் ஆகுகிறார். அன்று இரவே பூமிகா ஓட்டி வரும் கார் விபத்துக்குள்ளாகிறது. அதை பார்க்கும் உதயநிதி, பூமிகாவை அவரது இல்லத்தில் விட்டு விட்டு அவரின் காரை எடுத்து வருகிறார். அத்துடன் மறுநாள் காலை அந்தக் காரை பூமிகாவிடம் கொண்டு சேர்க்க நினைக்கிறார். ஆனால் அந்த காரில் அவர் மரணமடைந்த நிலையில் உடல் கிடக்கிறது. இதற்கு பின் என்ன நடக்கிறது? அந்த மரணத்திற்கு பின் இருக்கும் மர்மங்கள் என்ன? அந்த சம்பவத்தில் உதயநிதி எப்படி சிக்கினார்? அதற்கு பின் இருக்கும் பின் இருக்கும் பெரும் திட்டம் என்ன? என்பதே கண்ணை நம்பாதே.

 இந்த நிலையில் நேற்று கண்ணை நம்பாதே திரைப்படத்தின் சிறப்புக் காட்சி நேற்று பத்திரிக்கையாளர்களுக்கு திரையிடப்பட்டது. அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழப்பதற்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறித்த ஒரு காட்சி இடம் பெற்று இருந்தது. இந்த காட்சி குறித்து செய்தியாளர்கள் இயக்குநரிடம் கேள்வி எழுப்பினார்கள்.


அதற்கு பதிலளித்த இயக்குநர் மாறன், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தது அனைவருக்கும் தெரிந்ததே. பிரச்சனைக்குரிய காட்சியாக இருந்து இருந்தால், சென்சார் போர்டு அனுமதி தந்திருக்க மாட்டார்கள். எந்த ஆட்சியிலும் இந்த படத்தை வெளியிட்டிருப்போம். மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தற்போது உயிரோடு இல்லை என்றாலும், அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு எனவும் இயக்குநர் மாறன் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

Advertisement

Advertisement

Advertisement