• Jul 27 2024

வாரிசுகளின் கூட்டணி.. விஜய் மகனுடன் இணையும் விக்ரம் மகன் மற்றும் ஏஆர் ரஹ்மான் மகன்..

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் அதன் பின்னர் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தில் நாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, கவின், ஜெயம் ரவி, அதர்வா உள்ளிட்ட ஒரு சில நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் நாயகன் யார் என்பதை இயக்குனர் ஜேசன் சஞ்சய் இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறப்பட்டது.



ஆனால் தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் திரைப்படத்தில் நாயகனாக துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்திற்கு இசையமைப்பது ஏஆர் ரகுமானின் மகன் என்றும் கூறப்படுகிறது.

விஜய்யின் மகன், விக்ரம் மகன் மற்றும் ஏஆர் ரகுமானின் மகன் என வாரிசுகளின் கூட்டணி ஒரே திரைப்படத்தில் இணைவதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படம் விறுவிறுப்பான த்ரில் கதையம்சம் கொண்ட திரைப்படம் என்றும்  3 வாரிசு நட்சத்திரங்களுக்கும் இந்த படம் ஒரு திருப்புமுனையை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மே அல்லது ஜூன் மாதம் தொடங்கும் என்றும் 3 அல்லது 3 ஷெட்யூலில் இந்த படத்தை ஒட்டுமொத்தமாக முடிக்க ஜேசன் சஞ்சய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement