• Jan 18 2025

வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட கார்த்தி.. நண்பர்களும் அர்ஸ்ட்? திடுக்கிடும் தகவல்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர் தான் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் இறுதியாக ஜப்பான் படம் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவில் இதற்கு வெற்றி கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து 96 படத்தை இயக்கிய இயக்குனர் பிரேம் இயக்கத்தில் உருவாகும் படத்திலும், நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடித்து வருகிறார்.

பொதுவாக நடிகர் விழாக்களில், நிகழ்ச்சிகளில்,பேட்டிகளில்  கலந்து கொள்ளும்போது தங்களது வாழ்க்கையில் நடந்த தவிர்க்க முடியாத மறக்க முடியாத சம்பவங்களை பகிர்ந்து கொள்வார்கள்.

அவ்வாறு அவர்கள் சொல்லும்போது இந்த நடிகராக இப்படி? அவரா அப்படி? என ஆச்சரியமாக கேட்கத் தோன்றும்.


இந்த நிலையில், நடிகர் கார்த்திக்கும் அதிர்ச்சியான சம்பவம் ஒன்றை கூறியுள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,

தனது நண்பர்களுடன் இணைந்து செய்த ஒரு விஷயத்திற்காக போலீஸ், நீதி  மன்றம் வரை அழைத்துச் சொல்லப்பட்டுள்ளார். அது எப்போது எங்கே நடந்தது என்று பார்ப்போம்.

அதாவது, கார்த்தி படிப்புக்காக US சென்றிருந்தபோது தனது நண்பர்களுடன் காரில் சென்றுள்ளார். அப்போது சில நண்பர்கள் ஒரு காரிலும், இன்னும் சில நண்பர்கள் இன்னொரு காரிலும்  சென்றுள்ளார்கள். அப்போது கார்த்திக்கு முன் அவரின் நண்பரின்  கார் வேகமாக சென்றுள்ளது.


கார்த்திக்கு வழி தெரியாத காரணத்தினால் தனது நண்பரின் காரை பின் தொடர்ந்து செல்ல, முன் சென்ற கார் இன்னும் அதிவேகமாக செல்ல, பின்வந்த கார்த்தியின் காரும் அதை தொடர்ந்து வேகமாக சென்றுள்ளது.

இவ்வாறு ட்ராபிக் விதிமுறைகளை மீறி வேகமாக கார் ஓட்டியதற்காக கார்த்தியையும் அவரது நண்பர்களையும் அந்நாட்டு போலீஸ் கைது செய்துள்ளது.

இதைத் தொடர்ந்து அவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு 250 டாலர் அபராதம் கட்டுமாறும்   உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு US சென்ற போது தனக்கு இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்ததாக பேட்டி ஒன்றில் ஓப்பனாக கூறியுள்ளார் கார்த்தி.

Advertisement

Advertisement