• May 05 2024

காதலில் விழுந்த ஜான்வி கபூர்... காதலன் யார் தெரியுமா.. வெளியானது புகைப்படம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் பல மொழிகளிலும் கொடி கட்டிப் பறந்த ஒருவரே நடிகை ஸ்ரீதேவி. இவர் எந்த கதாபாத்திரம் என்றாலும் அதை கனகச்சிதமாக செய்து அசத்துவதில் பேர் போனவர். படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர் தயாரிப்பாளர் போனிக்கபூரை திருமணம் செய்து கொண்ட பின்னர் படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்தார். 

இவ்வாறாக இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட ஸ்ரீ தேவி 2008-ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். ஸ்ரீ தேவியின் மறைவுக்கு பிறகு படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ஜான்வி கபூர் அடிக்கடி காதல், பிரேக்கப், டேட்டிங் என தொடர்ந்து கிசுகிசுவில் சிக்கிய வண்ணமே இருக்கின்றார்.


அந்தவகையில் சமீபத்தில் ஜான்வி கபூர் மாலைதீவுக்கு சென்ற போது, அங்கு நடிகர் ஷிகர் பஹாரியாவுடன் இவர் இருந்தால் இருவரும் டேட்டிங் செய்வதாக பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், இது குறித்து இருவரும் இதுவரை காலமும் வாய் திறக்காமல் இருந்து வந்தனர்.


இந்நிலையில் சனிக்கிழமை டெல்லியில் நடந்த பேஷன் ஷோவில் ஷிகருடன் ஜான்வி ஜோடியாக காணப்பட்டார். அதாவது ஊடகங்களின் கேமிராவில் இந்த ஜோடி சிக்கியதை அடுத்து இவர்களின் காதல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்து, மீண்டும் ஜான்வி கபூர் பல ஊடகங்களின் தலைப்பு செய்தியில் இடம் பிடித்துள்ளார்.  


அந்தவகையில் தற்போது இவர்கள் இருவரினதும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் ஜான்வி கபூர் ஒரு பழுப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் உடை அணிந்து அசத்தலாகத் தோன்றினார், அதுமட்டுமல்லாமல் அதில் அவர் மேட்சிங் ஓவர் கோட்டுடன் இருந்தார். மேலும் ஷிகர் பிளிங்கி ஜாக்கெட்டில் ஸ்டைலாகத் தெரிந்தார். 


இவ்வாறாக தனது அம்மா ஸ்ரீதேவி காட்ட தயங்கிய கவர்ச்சியை அப்புகைப்படத்தில் காட்டி இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement