• May 04 2024

வீட்டுக்கு திரும்ப முடியாத அளவுக்கு இங்க வேலை வந்திருக்கு- தளபதி 67 படத்தில் நடிப்பதை உறுதி செய்த ஜனனி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலம் வாய்ந்த, ரசிகர்களின் அபிமான வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முக்கிய இடம் உள்ளது. அதுவும் உலக நாயகன் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவதும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

விக்ரமன்,ஷிவின், அசீம் ஆகிய மூவரில் யார் பிக்பாஸ் கோப்பையை வெல்லுவார்கள் என்று கேள்வி எழுந்தது. இந்த நிலையில் அசீம் பிக்பாஸ் 6 பைனலில் வின்னராக வெற்றிபெற்றுள்ளார் . ரன்னராக விக்ரமன், 3வதாக ஷிவினும் இடம் பெற்றுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.


இதில் இலங்கையை சேர்ந்த தொகுப்பாளரான ஜனனி போட்டியாளராக கலந்துகொண்டார். அவர் பாதியிலேயே வெளியேறினாலும் பெரிய அளவில் ரசிகர் கூட்டம் அவருக்கு கிடைத்து இருக்கிறது.

மேலும் அவர் தற்போது விஜய்யின் அடுத்த படமான தளபதி67 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க கமிட் ஆகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அது பற்றி அவரே இன்று பிக் பாஸ் 6 பைனலில் பேசி இருக்கிறார்."நிறைய மக்களுக்கு என்னை தெரியவேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன். அது நடந்துவிட்டது. மக்கள் நிறைய அன்பு கொடுத்து இருக்கிறார்கள். அதற்க்கு நன்றி. அவங்க வீட்டு பிள்ளை போல என்னை பார்க்கிறார்கள். நான் வந்த வேலை முடிந்துவிட்டது" என ஜனனி கூறினார்.


மேலும் ஊருக்கு (இலங்கைக்கு) போனீங்களா என கமல் கேட்க, 'இல்லை' என பதில் கூறினார் ஜனனி."வீட்டுக்கு திரும்ப முடியாத அளவுக்கு இங்க வாய்ப்பு வந்துருக்குல இங்க உங்களுக்கு" என கமல் மறைமுகமாக விஜய் 67 படம் பற்றி கேட்க, "ஆமா சார்" என கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement

Advertisement