• May 07 2024

சிறுவயதிலிருந்தே என்னை அறிந்தவர் ஜமுனா- நடிகையின் மரணத்தால் கமல் உருக்கம்..!

stella / 1 year ago

Advertisement

Listen News!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹம்பி என்ற ஊரில் நிப்பானி சீனிவாச ராவ்- கவுசல்யா தேவி தம்பதிக்கு மகளாக பிறந்தவர் ஜமுனா. அதன் பின்னர் இவருடைய குடும்பம் ஆந்திர மாநிலத்துக்கு  குடிபெயர்ந்தது. தெலுங்கு சினிமாவில் புரட்சிகளை ஏற்படுத்தியவர் என கருதப்படும் காரிகாபட்டி ராஜாராவ், ஜமுனாவை படத்தில் நடிக்கும்படி அறிவுரை கூறியிருக்கிறார். அதன்பிறகு  ’மா பூமி’ எனும் தன்னுடைய நாடகத்தில் நாயகியின் சகோதரி வேடத்தில் நடிக்கவைத்தார் ராஜாராவ்.

அப்போது அவருடைய கதாப்பாத்திரம் பெருமளவு பேசப்படவே ஜமுனாவை நாயகியாக வைத்து ‘புட்டிலு’ என்ற படத்தை எடுத்தார் ராஜாராவ். கடந்த 1953-ம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. அதற்கு பிறகு இந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளிலும் இவர் நடிக்க துவங்கினார். குறிப்பாக தமிழில் ‘பணம் படுத்தும் பாடு’ படத்தின் மூலம் அறிமுகம் ஆனார் ஜமுனா. 


பிறகு இவர் நடித்த மிஸ்ஸியம்மா படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது என்றே சொல்லவேண்டும். இதனை தொடர்ந்து ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில் கமல் ஹாசனுக்கு தாயாக ஜமுனா நடித்திருந்தார்.

100 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் ஜமுனா 1989-ல் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ராஜமுந்திரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நடிப்பிலும் அரசியலிலும் பெருவாரியான மக்களை ஈர்த்த ஜமுனா நேற்று காலை வயது மூப்பின் காரணமாக மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திரையுலக பிரபலங்கள் ஜமுனாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதனிடையே நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்,"சிறுவயதிலிருந்தே என்னை அறிந்தவர் ஜமுனா. அவர் நடித்த படங்களுக்கு நான் நடன உதவியாளராகவும், உதவி இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறேன். பிற்பாடு பல படங்களில் அவர் எனக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். ஓர் அரசியல்வாதியாக மக்கள் பணியும் செய்தவர். ஜமுனா அம்மாவிற்கு என் அஞ்சலி" எனக் குறிப்பிட்டுள்ளார்.



Advertisement

Advertisement

Advertisement