• Sep 26 2023

ஜெயிலர் பட வில்லனுக்கு குவியும் சினிமா பட வாய்ப்புகள் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில்

sarmiya / 1 week ago

Advertisement

Listen News!

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில்   வெளியாகிய ஜெயிலர்  திரைப்படம்  மாபெரும் வெற்றியினை பெற்று  630 கோடியை தாண்டி வசூலில்  சாதனை படைத்தது.

இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் சுனில் உள்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இதில்  வில்லன் கதாபாத்திரத்தில் விநாயகன் வர்மாவாக நடித்து மிரட்டி இருக்கிறார். 'மனசுலாயோ' என அவர் பேசி நடித்த வசனம் சமூக வலைதளங்களில் இப்போதும் பேசும் பொருளாக உள்ளது. 
இதுகுறித்து விநாயகன் அளித்த பேட்டியில் நான் ஜெயிலர் படத்தில் ரூ.35 லட்சம் சம்பளம் பெற்றதாக தகவல்கள் பதிவாகி உள்ளது. நான் ரூ.35 லட்சத்தைவிட 3 மடங்கு அதிகமாக சம்பளம் பெற்றேன்.படப்பிடிப்பில் என்னை மிகவும் நன்றாக நடத்தினார்கள். என் வாழ்க்கையில் அதிக கால்ஷீட் கொடுத்து நடித்த படம் ஜெயிலர்தான். 
ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து தமிழில் விநாயகனுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும்.  

Advertisement

Advertisement

Advertisement