• May 03 2024

'நான் இதுவரை இப்படி முயற்சி செய்ததில்லை''....”தங்கலான்”படத்தின் அப்டேட் கொடுத்த ஜிவி!!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகரான விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். 

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் விக்ரம் ஊர் தலைவராக நடிப்பது போல் படத்தின் டைட்டில் டீசர் வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.  படத்திற்கு ரசிகர்ளுக்கு மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்திற்கான அப்டேட் ஒன்றை ஜிவி பிரகாஷ் கொடுத்துள்ளார். 

அதாவது, அவர் ட்வீட்டர் பக்கத்தில் ” “தங்கலான் படத்தின் இரண்டு பாடலை பதிவு செய்து முடித்துவிட்டேன்.இந்த 2 பாடல்களுமே ரொம்பவே நல்ல விதமாக வந்திருக்கிறது. இந்த ஆடியோவில் சர்வதேச தரத்திலான இசையை இப்படத்தில் பயன்படுத்தியுள்ளேன். நான் இசையமைத்ததில் இதுவரை இப்படி முயற்சி செய்ததில்லை” என பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் இந்த படத்திற்காக மிகுந்த குஷியில் காத்திருக்கிறார்கள்.


Advertisement

Advertisement

Advertisement