தமிழ் சின்னத்திரையில் பிரபல்யமான தொகுப்பாளினியாக வலம் வந்த பிரியங்கா தேஷ் பாண்டே மீண்டும் ஒருமுறை திருமணமாகியுள்ளார் என்பது கடந்த 24 மணி நேரமாக சமூக வலைத்தளங்களை ஆச்சரியப்படுத்தும் செய்தியாக உள்ளது. இது ஒரு சைலன்ட் கல்யாணமாக நடைபெற்றது அனைத்து மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக திரை உலகத்தில் திருமணங்கள், காதல் விவகாரங்கள் என்றாலே சமூக ஊடகங்களில் வைரலாகும் செய்தியாகும். அந்தவகையில் பிரியங்கா தனது இரண்டாவது திருமணத்தை எந்தவொரு அறிவிப்புமின்றி, மிக நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை அழைத்து அமைதியாக நடத்தியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
பிரியங்காவை மணந்த DJ வசி ஒரு சாதாரண நபர் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் சென்னை உள்ளிட்ட பல முக்கிய மாநகரங்களில் நடைபெறும் கார்ப்ரேட் இவென்ட்ஸ், கிளப் நிகழ்ச்சிகள் மற்றும் பிரைவேட் பார்ட்டிகள் போன்ற அனைத்திலும் கலக்கும் பிரபல DJ ஆவார். இவருக்கு தனியொரு ஈவென்ட் மனேஜ்மென்ட் கம்பெனியும் உள்ளது.
பிரியங்கா மற்றும் வசி இருவரும் 2022ம் ஆண்டு ஒரு தனியார் இசை நிகழ்ச்சியில் சந்தித்து பேசியதன் மூலமே பழகிக் கொண்டனர். வசியின் இசை மீது பிரியங்காவுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதனைத் தொடர்ந்து சில சந்திப்புக்களும் ஏற்பட்டுக் கொண்டன. வசி தற்போது 42 வயதுடையவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் இருவருக்கும் 10 ஆண்டுகள் வித்தியாசம் இருப்பதாலேயே, இது சமூக வலைத்தளங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!