சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, சீதா தன்ர அம்மாவைக் கூட்டிக் கொண்டு அருண் வீட்ட போய் சத்தியா உயிரோட இருக்கிறதுக்கு காரணம் இவர் தான் என்று சொல்லுறார். அதைக் கேட்ட அருண் தான் பண்ணது சின்ன ஹெல்ப் தான் அதுக்குப் போய் ஏன் இப்படி பில்டப் கொடுக்கிற என்று கேக்கிறார். மேலும் சீதாவோட அம்மா நீங்க பண்ண உதவியை நாங்க எப்பவுமே மறக்க மாட்டோம் என்று சொல்லுறார்.
இதனை அடுத்து அருண் சீதாவ தனியாக் கூப்பிட்டு உன்ர அம்மாவ இன்டைக்கு சம்மந்தம் கதைக்கச் சொல்லிச் சொல்லுறார். அதுக்கு சீதா முதல்ல எங்க அக்கா கிட்ட சம்மதம் வாங்கோணும் என்று சொல்லுறார். அதைத் தொடர்ந்து எப்பதான் உன்னோட மாமாவ கண்ணில காட்டப்போற என்று அருண் கேக்கிறார். மேலும் மாமாவுக்கு என்னைப் பிடிக்கும் தானே என்று சீதாவப் பாத்துக் கேக்கிறார். அதுக்கு சீதா உங்களப் பிடிக்காதவங்க யாரும் இருப்பாங்களா என்று சொல்லுறார்.
இதனை அடுத்து சீதாவோட அம்மா இதேமாதிரி முத்து வீட்டுக்கும் போய் நன்றி சொல்ல வேணும் போல இருக்கு என்கிறார். அதைக் கேட்ட சீதா அங்க போனால் நமக்கு மரியாதை தரமாட்டாங்க என்று சொல்லுறார். அதனை அடுத்து சீதாவோட அம்மா அருண் உனக்கு தெரிஞ்சவர் என்று ஹெல்ப் பண்ணுறாரோ இல்ல வேற ஏதும் காரணம் இருக்கா என்று கேக்கிறார்.
அதுக்கு செல்வி எதுவும் கதைக்காமல் அங்க இருந்து போகின்றார். இதைத் தொடர்ந்து மீனாவும் சிந்தாமணியும் ஒரு ஓடர் செய்யுறதுக்கு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்த ஓனர் அந்த ஓடருக்கான பணத்தை முதலில் யார் கொடுக்கிறாங்களோ அவங்களுக்குத் தான் ஓடர் என்று சொல்லுறார். இதனை அடுத்து மீனா தனக்குப் போட்டியா சிந்தாமணி வந்திருப்பதை முத்துவுக்குச் சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!