• Jan 19 2025

நேர்ல தான் போக முடில, இதையாவது பண்ணியிருக்கலாம் தானே?- வடிவேலுவை விமர்சித்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்

stella / 1 year ago

Advertisement

Listen News!


மதுரையை பூர்விகமாக கொண்டவர் நடிகர் விஜயகாந்த். சினிமா மீது கொண்ட தீராக் காதலால் சென்னைக்கு வந்தார். தனது விடாமுயற்சியால் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமான நடிகர் விஜயகாந்த் பின்னர் வில்லனாக ஜொலிக்க தொடங்கினார். 

அதிலும் குறிப்பாக ஆக்ஷன் ஹிரோவாக தனக்கான இடத்தை பிடித்தார்.இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த டிசம்பர் 28ம் தேதி இறப்புக்குள்ளானார். இவருடைய இறுதிச் சடங்கில்  சுமார் 15 லட்சம் பேர் பங்கேற்றதாக பிரேமலதா விஜயகாந்த் அறிவித்து இருந்தார்.


அவரின் இறுதிச் சடங்கிற்கு நேரில் வர முடியாத பிரபலங்கள் இப்போது அவரை அடக்கம் செய்த இடத்திற்கு வந்து வணங்கி வருகிறார்கள்.மேலும் விஜயகாந்த் பற்றிய பேச்சுக்கள் தற்பொழுதும் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன.

இது ஒருபுறம் இருக்க,நடிகர் விஜயகாந்தின் இறப்பிற்கு வடிவேலு எதுவும் சொல்லவில்லை எனப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ரஞ்சித் பேசும்போது, இந்த உலகத்தில் யாரும் நிரந்தர எதிரி கிடையாது.


வடிவேலுவுக்கும் விஜயகாந்துக்கும் இடையே உள்ளி தனிப்பட்ட பிரச்சினைக்குள் நான் செல்லவில்லை, எதிரியாக இருந்தாலும் இறந்து விட்டால் நேரில் சென்று அஞ்சலி செலுத்துவது தான் தமிழர்களின் பழக்கம். நேரில் செல்ல முடியவில்லை என்றால் கூட ஒரு அறிக்கையாவது வடிவேலு விட்டிருக்க வேண்டும். அதையும் அவர் செய்யாதது தவறான விஷயம் என பேசியுள்ளார்.   

Advertisement

Advertisement