• May 04 2024

அடடேய் இது சூப்பரா இருக்கே...! விஜய் மகன் இயக்கிய வேற லெவல் குறும்படம்...வெளியான வீடியோ இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தளபதி விஜய். இவர் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செயது. இருக்கிறது. 

 தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் லியோ படத்தில் நடித்து வருகிறார். தளபதி விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு ஒரு சின்ன டான்ஸ் ஆடியிருப்பார் சஞ்சய். 

அதனை தொடர்ந்து சில படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்து உள்ளார். ஜேசன் சஞ்சய் கனடாவில் ஃபிலிம் மேக்கிங் படிப்பு படித்து வருகிறார். ஜேசன் சஞ்சய் ஒரு சில குறும்படங்களை இயக்கி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து. இதுவரை இவர் ஜங்க்ஷன் மற்றும் சிரி என்ற சில குறும்படத்தை இயக்கி இருக்கிறார்.

ஆனால், இந்த இரண்டு குறும்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இப்படி ஒரு நிலையில் தற்போது இவர் மீண்டும் ‘Pull The Trigger’ என்ற குறும்படத்தை இயக்கி இருக்கிறார். 13.30 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம் சஞ்சய் இயக்கிய மற்ற குறும்படத்தை விட நன்றாகவே இருக்கிறது. அதே போல இதற்கு முன்னர் இவர் இயக்கிய குறும்படங்களை விட இதில் தரமும் நன்றாகவே இருக்கிறது என்றே கூறலாம்.




Advertisement

Advertisement

Advertisement