• Sep 22 2023

முருகன் பக்தி தான் என்னை அவரோடு இணைத்தது... 'லக்கிமேன்' பட இயக்குநர் பாலாஜி Open Talk..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

யோகி பாபுவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லக்கி மேன்'. பாலாஜி வேணுகோபால் இயக்கிய இப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் ஆர்.ஜே.வாக பணிபுரியும் போது, பல்வேறு படங்களில் நடித்துள்ள பாலாஜி, இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை பெற்று இருந்தநிலையில் இன்றைய தினம் படமும் ரிலீசாகி சிறந்த வரவேற்பை பெற்று வருகின்றது. அதாவது நகைச்சுவை மற்றும் யதார்த்தத்துடன் கூடிய ஒரு நல்ல உணர்ச்சிகரமான படமாக லக்கி மேன் இருப்பதாக பார்வையாளர்களிடையே  சுவாரஸ்யமான  விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் பாலாஜி வேணுகோபால் பேசிய ஒரு விடயமானது தற்போது வைரலாக்கப்பட்டு வருகின்றது. அதாவது "20 வருடங்களாக வானொலி, டிவி, குரல் கலைஞர், நடிப்பு என அனைத்தையும் செய்துள்ளேன். ஆனால் லக்கி மேன் படத்தை எடுக்க இத்தனை ஆண்டுகள் ஆனது. 'முருக பக்தி' தான் யோகி பாபுவுடன் என்னை இணைத்தது. கதையைக் கேட்ட அவர், 'இந்தக் கதை என் சொந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பது போல் உள்ளது. கண்டிப்பாகச் செய்வேன் என்றார்" என யோகிபாபு குறித்துப் பெருமையாக பேசியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement