• Apr 27 2024

"இந்தியாலதான் நான் சம்பாதிச்சேன்''...மனம் திறந்த அக்சய் குமார்! என்ன சொல்லியிருக்காரு பாருங்க..

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் அக்ஷய் குமார்.   இவர் நடிப்பில் உருவாகியுள்ள செல்ஃபி திரைப்படம் இன்று (பிப்ரவரி 24) வெளியாகி உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'டிரைவிங் லைசன்ஸ்' படத்தின் இந்தி ரீமேக்காக செல்ஃபி திரைப்படம்  வெளியாகி இருக்கிறது. இதில் அக்சய் குமார், இம்ரான் ஹாஷ்மி, மிருனாள் தாக்கூர், டயானா பென்ட்டி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

இந்தத் திரைப்படம் தொடர்பான பல்வேறு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் அக்சய் குமார் கலந்து கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக இந்தி டிவி சேனலான ஆஜ் தக் டிவியில் ஒளிபரப்பாகும் சீதி பாத் நிகழ்ச்சியின்  புதிய சீசனின் முதல் எபிசோடில் அக்சய் குமார் கலந்து கொண்டார்.2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு  முன்பு   பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரு நேர்காணலுக்குப் பிறகு அக்சய் குமாரின் கனடா நாட்டு குடியுரிமை விவாதப் பொருளாக மாறியது. 

கனடா நாட்டின் குடியுரிமை வைத்திருப்பதன் காரணமாக பல விமர்சனங்களை எதிர்கொண்ட பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், அது குறித்து பேசியுள்ளார். 

  “இந்தியாதான் எனக்கு எல்லாமே... நான் சம்பாதித்ததெல்லாம் இங்கிருந்துதான்.மக்களுக்கு நான் திரும்பக் கொடுக்க ஒரு வாய்ப்பு கிடைத்ததில் நான் அதிர்ஷ்டசாலி. மக்கள் எதுவும் தெரியாமல் விமர்சனம் செய்யும் போது  மோசமாக உணர்கிறேன். என் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்த போது வேறு வேலை செய்ய நினைத்து கனடாவில் உள்ள எனது நண்பனிடம் ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறினேன்.  

அதற்காக தான் கனடா நாட்டு குடியுரிமையை பெற்றேன்.  அதிர்ஷ்டவசமாக என்னுடைய 2 படங்கள் அப்போது அடுத்தடுத்து வெற்றி பெற்றன.  பாலிவுட்டில் எனக்கு மீண்டும் மார்க்கெட்  வந்தது. தற்போது சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து வருகிறேன். கனடா பாஸ்போர்ட் என்னிடம் இருப்பதையே மறந்துவிட்டேன். தற்போது கனடா குடியுரிமையை நான் துறந்துள்ளேன்” என கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement