• Sep 13 2024

தலையில் பலத்த அடி.. பார்க்கவே கஷ்டமா இருந்திச்சு... TFF வாசனுக்கு நடந்தது என்ன..? கண்கலங்கியவாறு உண்மையை போட்டுடைத்த நண்பன்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

தனது யூடியூப் பக்கத்தில் விலை உயர்ந்த பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்யும் வீடியோக்களைப் பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் தான் யூடியூப் பிரபலம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் TTF வாசன். இவரைப் போல பைக்கில் பயணம் செய்ய விரும்பும் பலரும் இவரை பின்பற்றி வருகின்றனர்.


இவருக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் சமூக வலைத்தளங்களில் உள்ளனர். அண்மைக்காலமாக  டிடிஎஃப் வாசன் 2k கிட்ஸ்களின் பேராதரவுடன் ட்ரெண்ட் ஆகி வருகிறார்.ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருக்கும் TTF வாசன்,  சில வழக்குகளில் சிக்கி இருந்தார். 


இந்நிலையில் வாசன் நேற்றைய தினம் இவர் பைக்கில் கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளார். வாசனுக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதாவது 230கிலோ மீற்றர் வேகத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது இவர் வீலிங் செய்தமையினால் தான் அவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. 


இந்நிலையில் இது தொடர்பாக வாசனின் நண்பரான அஸிஸ் கூறுகையில் "வாசன் உண்மையில் வீலிங் செய்யவில்லை, அந்த நேரத்தில் அவருக்கு மயக்கம் வருகிறது என்று சொன்னார். உடனே நான் ஓரமா வண்டியை நிறுத்து என்று சொல்லிக்கொண்டே இருந்தேன், அதற்குள் எதிர்பாராமல் இதெல்லாம் நிகழ்ந்து விட்டது" என்றார்.

மேலும் "வாசன் எப்படி வீலிங் செய்வார் என்பது எல்லாருக்குமே தெரியும், அவர் வேண்டும் என்று அப்படி செய்யவில்லை. விபத்து ஏற்படும் சமயத்தில் வாசன் ஹெட்மெட் போட்டு இருந்தார், ஆனாலும் அவருக்கு தலையில் நல்ல அடிபட்டுவிட்டது, இருப்பினும் இப்போது தலையில் எந்த பிரச்சனையும் இல்லை" என்றார்.


அதுமட்டுமல்லாது "ஸ்கேன் எடுக்கும் போது வாசனால் கொஞ்சமும் முடியவில்லை எனவும், அதை பார்க்கவே ரொம்பக் கஷ்டமாக இருந்திச்சு" எனவும் கூறியுள்ளார் அஸீஸ்.

Advertisement

Advertisement