• Jan 08 2025

காக்கமுட்டை மணிகண்டனுடன் மீண்டும் இணைகிறாரா விஜய் சேதுபதி.? வெளியான தகவல்

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் வில்லன் கேரக்டரிலும் நடித்து பிரபலமானவர்தான் விஜய் சேதுபதி. இவருடைய நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 

விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமாக மகாராஜா திரைப்படம் அமைந்தது. இந்த படத்தில் எதார்த்தமாக நடித்த விஜய் சேதுபதி, ரசிகர்களை தனது நடிப்பால் மிரள வைத்திருந்தார். அதன் பின்பு விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் வெளியானது. ஆனால் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இன்னொரு பக்கம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் களமிறங்கியுள்ளார் விஜய் சேதுபதி. இந்த சீசன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது முடிவு கட்டத்தை  எட்டியுள்ளது.


இந்த நிலையில், காக்காமுட்டை படத்தை இயக்கிய மணிகண்டன் மீண்டும் விஜய் சேதுபதியுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூகத்துக்கு நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்ற முயற்சிகளில் மணிகண்டனும் முக்கியமான ஒருவர். ஆனால் அவர் சமீபத்தில் கடைசி விவசாயி என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் அவர் சென்னையில் உள்ள வீட்டை விற்கும் நிலை ஏற்பட்டது.


இதற்கு இடையில் விஜய் சேதுபதியை வைத்து இன்னொரு படத்தை இயக்குவதற்கும் முயற்சி செய்துள்ளார். அத்துடன் வெப் சீரிஸ் ஒன்றை எடுப்பதற்கும் திட்டம் இட்டுள்ளார். அதற்கான ஷூட்டிங்கும் நடைபெற்றது. ஆனால் அதிலிருந்து திடீர் என விலகி இருந்தார்.

தற்போது விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்துள்ளார். விஜய் சேதுபதியும் அவருக்கு ஜூன் மாதத்திற்கு பிறகு தேதி கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement