• Jan 08 2025

ரொம்ப கஷ்டமா இருக்கு..!! முதன் முறையாக மனம் திறந்த ராணவ்..!! வைரல் வீடியோ

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் எட்டு இன்றையோடு 93 வது நாளை கடக்கவுள்ளது. இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த சீசன் நிறைவடைய உள்ள நிலையில், எஞ்சியுள்ள போட்டியாளர்கள்  மத்தியில் கடும் போட்டி நிலவி வருகின்றது. 

தற்போது பிக்பாஸில் பங்குபற்றி எலிமினேட்டான பழைய போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து  வருகின்றார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்பு ஒரு சில வாரங்களிலேயே மேலும் ஆறு வைல்ட் கார்ட் என்ட்ரிகள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்கள். அதில் தற்போது ரயான் மட்டுமே எஞ்சியுள்ளார்.


இன்றைய தினம் வெளியான முதலாவது ப்ரோமோவில் பிக்பாஸ் வீட்டிற்கு முதலாவதாக சுனிதா என்ட்ரி கொடுக்கின்றார். இதன்போது சௌந்தர்யா, ஜாக்குலின் மற்றும் விஷால் ஆகியோரை வச்சி செய்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருந்தது. 

இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து இறுதியாக  எலிமினேட்டாகி சென்ற ராணவ் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


அதில் அவர் கூறுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகி வந்த பிறகு எனது சோசியல் மீடியாவை என்னால் கையாள முடியவில்லை. அந்த அளவுக்கு உங்களுடைய அன்பு என்னை கட்டிப் போட்டு உள்ளது. இந்தியாவில் மட்டும் இல்லாமல் மலேசியா, இலங்கை, லண்டன் போன்ற பல நாடுகளில் இருந்து எனக்கு நிறைய மெசேஜ்கள் வந்திருந்தன.

உண்மையாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவோர்ட் வாங்கி இருந்தால் கூட எனக்கு இவ்வளவு சந்தோஷம் கிடைத்திருக்காது. ஆனால் உங்களைப் போன்ற நல்ல ரசிகர்கள் கிடைத்தது எனக்கு  மிகப் பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது. 

மீண்டும் நான் உங்களுக்கு எல்லாம் நன்றி என்ற ஒற்றை சொல்லில் எனது அன்பை முடித்துக் கொள்ள விரும்பவில்லை என்று மிகவும் உருக்கமாக பேசியுள்ளார் ராணவ்.

Advertisement

Advertisement