• May 04 2024

விஜய் டிவி தொகுப்பாளினி டிடியா இது?- நடிகை எமிஜாக்சனுக்கே டஃப் கொடுப்பார் போல இருக்கே- லண்டனில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் செல்லப்பிள்ளை என அனைவரும் அழைக்கும் அளவிற்கு, தன்னுடைய இளம் வயதிலேயே விஜய் டிவியில் தன்னுடைய தொகுப்பாளர் பணியை துவங்கிய டிடி, பலமுறை சிறந்த தொகுப்பாளருக்கான விருதினைப் பெற்றவர் தான் டிடி எனப்படும் திவ்ய தர்ஷினி.


திவ்யதர்ஷினி தொகுப்பாளராக மட்டுமின்றி, ஆரம்பத்தில் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். நடிகை ராதிகா தன்னுடைய ராடான் நிறுவனம் மூலம் தயாரித்து நடித்த, அரசி, செல்வி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். பின்னர் விஜய் டிவிக்கு நுழைந்த டிடி, ஜோடி நம்பர் 1, காபி வித் டிடி... என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். 


இதன் மூலம் கிடைத்த பிரபலம், இவருக்கு சில வெள்ளித்திரை வாய்ப்புகளையும் பெற உதவியது.ஆரம்பத்தில் சில படங்களில் இவரை ஹீரோயினாக நடிக்க வைக்க கூட சிலர் முயற்சி செய்த நிலையில், ஒரு சில காரணங்களால் அதனை அவர் தவிர்த்து விட்டார். பின்னர் ஜூலி கணபதி, நள தமயந்தி, பவர் பாண்டி, சர்வம் தளமயம், காபி வித் காதல் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.


கடந்த 2014 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.விவாகரத்துக்கு பின்னர் தான், ஃபேஷன் நிகழ்ச்சி, திரைப்பட நடிப்பு போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டி வந்த டிடி , காலில் அறுவை சிகிச்சை செய்துள்ள காரணத்தால் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார்.


எனினும் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் டிடி, அவ்வப்போது விதவிதமான உடையில் போட்டோ சூட் செய்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது, லண்டனில் எடுத்துளள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement