• Apr 28 2024

மாமன்னன் படத்தின் கதை இது தானா?- வடிவேலுக்கும் உதயநிதிக்கும் இடையில் இப்படியொரு உறவிருக்கா?- திடீரென கதிந்த தகவல்

stella / 10 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் தான் மாமன்னன்.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கூட அண்மையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இப்டத்தைப் பார்த்த கமல்ஹாசன் கூட பாராட்டி இருந்ததாக மாரி செல்வராஜ் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இப்போது இணையத்தில் மாமன்னன் படத்தின் முழு கதையும் கசிந்துள்ளது. அதன்படி உதயநிதி மற்றும் வடிவேலு ரத்த சொந்த உறவுகளாம். அதாவது தேவர் மகனின் இசக்கி கதாபாத்திரத்தை தான் வடிவேலுவாக மாமன்னனின் சித்தரித்துள்ளார் மாரி செல்வராஜ். அதன்படி இசக்கியின் மகன் தான் உதயநிதி.


அத்திவீரன் என்ற ராசா கண்ணு கதாபாத்திரத்தில் உதயநிதி நடித்திருக்கிறார். இவர் மாணவர்களுக்கு தற்காப்பு கலையை கற்றுத் தருபவராக இருக்கிறார். இந்நிலையில் சிறு வயதிலேயே தனது தந்தையுடன் ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவத்தின் மூலமாக பேசாமல் இருக்கிறார்.வடிவேலு தனது ஊரில் செல்வாக்கு மிக்க மனிதர்கள் சிலர் ஒடுக்கப்பட்ட மக்களின் உழைப்பை சுரண்டுவதை தடுப்பதற்காக ஆதாரங்கள் சேகரித்துக் கொண்டிருக்கிறார். அப்போதுதான் உதயநிதிக்கு தனது தந்தையும் ஒரு அநீதியால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற விஷயம் தெரிய வருகிறது.


அதன் பிறகு வடிவேலு மற்றும் உதயநிதி இருவரும் அதாவது அப்பா, மகன் கூட்டணி சேர்ந்து ஒரு நல்ல சமூக மாற்றத்தை கொண்டு வருகிறார்களா என்பது தான் மாமன்னன் கதையாம். மேலும் தன்னுடைய பாணியில் மாமன்னன் படத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக மாரி செல்வராஜ் எடுத்திருக்கிறார்.

Advertisement

Advertisement

Advertisement