• Mar 28 2023

பிரகஷ்ராஜ், லலிதாவை பிரிந்ததற்கு இதுதான் காரணமா? பிரிந்த பின்னரும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காத ப்ரியம்....

ammu / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் பிரகாஷ்ராஜ் குறித்து பெரிய அறிமுகம் எதுவும் தேவையில்லை. "செல்லோ"..... என்றாலே இவரை தான் மனம் நினைக்கும். வில்லன் கேரெக்ட்டர் நடித்தாலும் ஏகப்பட்ட ரசிகர்களை தன் வசப்படுத்தி உள்ளார். 


கடந்த 1994 ஆம் ஆண்டு லலிதா குமாரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 


கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் லலிதா குமாரி மற்றும் பிரகாஷ்ராஜ் இருவரும் சேர்ந்து குடும்ப வாழ்க்கை நடத்தி வந்தனர். ஆனால் கடந்த 2009 ஆம் ஆண்டு இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். 


ஆனால், போனி வர்மா என்ற நடன இயக்குனருடன் ஏற்பட்ட காதல் தான் நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னுடைய மனைவி லலிதாவை விவாகரத்து செய்ய காரணமாக அமைந்துவிட்டது என்று கூறப்பட்டது. இந்நிலையில், பிரபல கவிஞர் கண்ணதாசனின் மகளும் ALS என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தியவருமான ஜெயந்தி கண்ணப்பன் சமீபத்திய பேட்டி ஒன்றில் அடிகள் பிரகாஷ்ராஜ் விவாகரத்து குறித்து பேசி இருந்தார்.


அதில் அவர் கூறியதாவது, நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் லலிதா ஆகியோருடைய திருமண வாழ்க்கை மிகவும் அழகானது. நடிகர் பிரகாஷ் ராஜ் டிஸ்கோ சாந்தியின் வீட்டில் வைத்து தான் லலிதாவை சந்தித்தார்.


லலிதாவை பொருத்தவரை விவாகரத்திற்கு பிறகும் தன்னுடைய கணவர் பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு என் குழந்தைகள் மீது முழு உரிமை உண்டு அவர்களை பார்ப்பதற்கோ பேசுவதற்கோ நான் தடை விதிக்க போவதில்லை.


அதற்கு நான் எந்த வகையிலும் இடையூறாக இருக்க மாட்டேன் என்று வெளிப்படையாக கூறியிருந்தார். இந்த பிரிவிற்கு பிறகும் கூட நடிகர் பிரகாஷ்ராஜ் குறித்து பொதுவெளியில் எந்த ஒரு குற்றச்சாட்டையும் சொன்னதில்லை லலிதா.


அவர் வளர்ந்த குடும்பத்தின் பின்னணி அப்படி. நடிகையாக முயற்சிக்கும் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் நடிகை டிஸ்கோ சாந்தியின் வீட்டில் தான் தங்குவார்கள். ஏனென்றால் அந்த அளவுக்கு அவர்கள் வீட்டில் பாதுகாப்பு மற்றும் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்கள் உண்டு. தற்போது லலிதா நிறைய ஆன்மீக பயணங்களை செய்து வருகிறார். கோவை சரளாவுடன் இணைந்து நிறைய வட மாநிலங்களில் உள்ள ஆன்மீக தளங்களுக்கு சென்று வருகிறார்.


இது இயற்கையில் நடக்கக்கூடிய விஷயம் வாழ்க்கையின் உச்சத்தை பார்த்தவர்கள். அதன் பிறகு வேறு என்ன என்று யோசிக்கும் பொழுது கிடைக்கக்கூடிய ஒரே ஒரு விடை ஆன்மிகம் தான்.


தற்போது நிறைய கோயில்களுக்கு சென்று அந்த கோவில்கள் எப்படி இருக்கிறது என்பது குறித்த வீடியோக்களையும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார். நடிகை லலிதா இப்படி கோவில்களுக்கு செல்வது என்னுடைய வாழ்க்கை சிறப்பாக செயல்பட உதவுவதாகவும் இருக்கிறது என்று கூறினார்.


15 ஆண்டுகள் உன்னுடன் சேர்ந்து வாழ்ந்த கணவர் வேறொரு பெண்ணை தேடிச் செல்கிறார் என்றால் அதற்கு முதல் முதல் காரணம் நீ மட்டும் தான் என்று நான் கூறியிருக்கிறேன்.


அதனை அவளும் உண்மைதான் என்று ஏற்றுக் கொண்டார். சமீபத்தில், பிரகாஷ்ராஜை ஒரு திருமண நிகழ்ச்சியில் சந்தித்தபோது லலிதாவை பற்றி பேசினேன். அதற்கு அவர் எண்ணமும் செயலும் எப்போதும் மகிழ்ச்சியாக தான் இருக்கும் அவள் உலகத்தில் எங்கிருந்தாலும் சந்தோசமாகவே இருக்க வேண்டும்.


சந்தோஷமாக இருப்பாள். அவருடைய எண்ணமும் செயலும் எப்போதும் அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் என்று கூறினார். இவருடைய இந்த பேட்டி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement