தமிழ் சின்னத்திரையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் தான் டிடி எனப்படும் திவ்ய தர்ஷினி. இவர் கலைஞர் டிவி சன்டிவி, விஜய் டிவி எனப் பல்வேறு தெலைக்காட்சிகளில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
மேலும் தற்பொழுதும் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வரும் இவர் பிரபலங்களை பேட்டி காணும் நிகழ்ச்சிகளை முக்கியமாக தொகுத்து வழங்கி வருகின்றார். இது தவிர பல திரைப்படங்களிலிலும் நடித்து வருகின்றார்.
இது தவிர சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.விஜய் தொலைக்காட்சியில் இவர் இல்லாத ஷோ இல்லை என்றே கூறலாம், அந்த அளவிற்கு இவர் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி இருக்கிறார்.
ஆனால் இப்போதெல்லாம் டிவி பக்கமே காணவில்லை, அதற்கு பதில் இசை நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகள் என தொகுத்து வழங்கி வருகிறார்.இவர் விஜய் டிவியில் இருந்து வெளியேறியது குறித்து அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார். அதில் அவர், மணிக்கணக்காக படப்பிடிப்பு நேரத்தில் நின்று கொண்டிருந்ததால் தனக்கு காலில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறியிருக்கிறார்.
பொதுவாக விஜய் டிவியில் நான் தொகுத்து வழங்காத நிகழ்ச்சி இல்லை என்று சொல்லும் அளவிற்கு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறேன்.அப்போதெல்லாம் தொடர்ச்சியாக பல மணி நேரங்கள் சூட்டிங் நடந்து கொண்டிருக்கும் அப்போது முழுக்க முழுக்க தொகுப்பாளர்கள் நிற்க வேண்டும். அது எனக்கு மட்டுமல்ல தொகுப்பாளராக இருக்கும் அனைவருக்கும் இந்த மாதிரி நிலைமை தான்.
ஒருகட்டத்தில் எனது உடல்நிலை சரியில்லாமல் போனதால் எனக்கு நிகழ்ச்சிகள் குறைய தொடங்கிவிட்டது, எனவே தான் விஜய் டிவியில் இருந்து வெளியேறினேன் என கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!