• May 12 2024

நடிகை சமந்தாவின் விவாகரத்துக்கு இதான் காரணமா..நீண்ட நாட்களுக்கு பிறகு உண்மையை போட்டுடைத்த நடிகை..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.இவர்  பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

இவ்வாறுஇருக்கையில்  நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.திருமணமாகி 4 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று கடந்த ஆண்டில் இருந்து தனிமையில் வாழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா.



சமீபத்தில் அரியவகை நோயான மயோசிடிஸ் நோயால் பாதிகப்பட்டு அவதிப்பட்டு சிகிச்சையும் பெற்று வருகிறார்.இந்த தகவல் ரசிகர்களிடத்தே பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், பிரபல பாடகியும் சமந்தாவின் நெருங்கிய தோழியுமான பாடகி சின்மயி சமந்தா விவாகரத்து குறித்து சமீபத்தில்  ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.



சமந்தாவின் பல படங்களுக்கு சின்மயி தான் குரல் கொடுத்து வந்தார். எனினும் சமீபத்தில் சமந்தாவே தன் படங்களுக்கு குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். திருமணத்திற்கு பின்னர் சமந்தாவுக்கு உறுதுணையாக இருந்ததே கணவர் நாக சைதன்யாவின் குடும்பத்தினர் தான்.


ஆனால் கணவரை விட மனைவி அதிகமாக சம்பாதிக்கிறார் என்பது தான் பெரிய பிரச்சனை. இதனால் குடும்பத்தில் வயிற்றெரிச்சல் ஏற்படும். மேலும் இதன் ஒரு காரணம் தான் சமந்தாவின் விவாகரத்துக்கு பெரிய புள்ளியாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement