• May 04 2024

துணிவு படத்தில் அஜித்தின் பெயர் இது தானா?- சிட்டிசன் பாணியில் இருக்கின்றதே

stella / 1 year ago

Advertisement

Listen News!

அஜித் நடிப்பில் மிக பிரமாண்டமாக இந்த பொங்கலுக்கு வெளிவந்த படம் துணிவு. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.இந்நிலையில் துணிவு படத்தில் அஜித் பெயர் என்ன என்பது தான் தற்போது இது எல்லோரின் கேள்வியும்.

கடைசி வரை அதை அஜித்தும் எந்த இடத்திலும் கூறியிருக்கவும் மாட்டார். தற்போது படத்தில் ஒரு காட்சியில் அஜித் கேங் குறித்து விசாரிக்கையில், ஒரு இடத்தில் பாஸ்போர்ட்டில் டேவிட் B என்று இருக்கும்.

அதை டேவிட் பில்லாவை குறிப்பதாக ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். அதே போல் மற்றொரு பாஸ்போர்ட்டில் அப்துல்லா என்று இருக்கும்.இது சிட்டிசன் பட கதாபாத்திரத்தை காட்டுவது போல் உள்ளது என ரசிகர்கள் பல குறியீடுகளை கண்டுப்பிடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement