• May 08 2024

பிக்பாஸ் பிரபலம் ரியோவின் மகளா இது?- இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரே- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் குறிப்பாக சன் மியூசிக் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் தொகுப்பாளர்களாக வளர்ந்தவர்கள் பலர் உள்ளார்கள்.இவர்கள் வரிசையில் முக்கியமானவர் தான் ரியோ ராஜ்.பல வருடங்கள் இசை தொலைக்காட்சியில் பணியாற்றிய அவர் பின் விஜய் டிவி பக்கம் முதலில் சின்னத்திரை நடிகராக வந்தார்.


அதன் அடிப்படையில் சரவணன்-மீனாட்சி என்ற தொடரில் நாயகனாக நடித்தார். அதன்பின் விஜய் தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார், பின்னர் பிக்பாஸ் சீசன் 3 இலும் கலந்து கொண்டு பிரபல்யமானார்.


அதேபோல் சத்ரியன், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, காதல் ஒன்று கண்டேன், பிளான் பண்ணி பண்ணனும், ஜோ போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.இவர் சரவணன்-மீனாட்சி தொடர் நடித்துக் கொண்டிருக்கும் போது தனது நீண்டநாள் காதலியான ஸ்ருதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகளும் உள்ளார்.


தற்போது 6வது திருமண நாள் வர ரியோ ராஜ் மனைவிக்கு வாழ்த்து கூறி அழகிய புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.அதில் தனது மகளிக் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட அடடே ரியோவின் மகளா இவர் நன்றாக வளர்ந்துவிட்டாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement