• Jan 19 2025

சின்னத்தம்பி படத்தில் எனக்கு கல்யாணம் என திரிந்த நடிகரா இது ?- இப்போது எப்பிடி இருக்கிறார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் முக்கியமான இயக்குநராக வலம் வந்தவர் தான் பி. வாசு. இவரது இயக்கத்தில் கடந்த 1992ம் ஆணவெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சின்னத்தம்பி. குஷ்பு மற்றும் பிரபு நடிப்பில் வெளியான இப்படம்  ஓராண்டுக்கும் மேல் ஓடி மாபெரும் சாதனை படைத்தது. 

இதில் இவர்களுடன் மனோரமா, ராதாரவி என பலர் நடித்திருந்தனர்.இந்த படத்தில் கணவரை இழந்த பெண்ணாக நடித்திருக்கும் மனோரம்மாவுக்கு தாலிகட்ட செல்லும் காட்சியில் எனக்கு கல்யாணம், எனக்கு கல்யாணம் என்று கழுத்தில் மல்லிகை பூவை போட்டுக்கொண்டு வெகுளியான கதாபாத்திரத்தில் மார்த்தாண்டம் நடித்திருப்பார்.


சினிமாவில் அறிமுகமாகவே கஷ்டப்பட்டாலும் இவருக்கு ரீச் கொடுத்தது சின்னதம்பி படம் தான்.பல ஆண்டுகளாக திரையில் காணாமல் போன இவர் என்ன ஆனார் என்று தெரியாமல் இருந்தது.


இந்த நிலையில் நடிகர் மார்த்தாண்டத்தின் லேட்டஸ்ட் க்ளிக் வெளியாகியுள்ளது, அதைப்பார்த்த ரசிகர்கள் அட இவரா என ஆச்சரியமாக பார்க்கின்றனர். அத்தோடு இவரை காமெடி நடிகராக பார்க்க ஆவலாக இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement