• May 04 2024

டீஆர்பி ரேட்டிங்கை தக்க வைக்க சன்தொலைக்காட்சி எடுக்கும் புதிய ஆயுதம் இந்த சீரியலா?

sarmiya / 6 months ago

Advertisement

Listen News!

சன் தாெலைக்காட்சி நாடகங்களுக்கு போட்டியாக எத்தனையோ தொலைக்காட்சிகளின் சீரியல்கள் வந்தாலும் முதலிடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சி தான். இத் தொலைக்காட்சியில் 18  சீரியல்கள் கிட்டதட்ட ஔிபரப்பாகி வருகின்றது.


எப்பொழுதும் சாயங்காலம் வரும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும்.அதனால் கயல், ஆனந்தராகம், சுந்தரி, மற்றும் எதிர் நீச்சல் போன்ற சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்நது இடம்பெற்று வருகின்றது.இதில் எதிர்நீச்சல் சீரியலே மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று முதலிடத்தில் இருந்தது. ஆனால்  குணசேகரன் பாத்திரத்தில் நடித்த மாரிமுத்து இல்லாமல் போனதோ அப்பவே இந்த நாடகம் டம்மியாக மாறிவிட்டது.


அதனால் இந்த சீரியலை நம்பி இருந்தால் போதாது என   பூவா தலையா என்ற புது சீரியல் வர இருக்கின்றது. இவ் நாடகம் குடும்பம் கொண்டாடும் அன்பையும் பாசத்தையும் வைத்து வருகின்றது. மேலும் வழக்கம் போல் கிராமத்து கதை இல்லாமல் நகரத்தில் ஏற்படக்கூடிய அன்றாட பிரச்சினைகளை கொண்டு வெளிவர இருக்கின்றது. இது எதிர் நீச்சல் போல் வரவேற்பை பெற்று டீ.ஆர்.பியில் இடம் பிடிக்கின்றதா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement

Advertisement

Advertisement