• May 04 2024

மஞ்சக்காட்டு மைனாவா இது?..நம்ம சாய் பல்லவி எவ்ளோ அழகாக இருக்காங்க..வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வரும் பிரபலங்களில் ஒருவர் நடிகை சாய் பல்லவி. 'பிரேமம்' என்ற படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்ததிலிருந்து இவரை தெரியாதவர் என்று யாருமே இல்லை. இவரது நடிப்பிற்கும், நடனத்திற்கும், அழகிற்கும் மயங்காதவர்களே இல்லை என்று தான் கூற முடியும்.

இவருக்கு நடனத்தின் மீதுள்ள பிரியம் இன்று நேற்று வந்தது அல்ல. சிறுவயது முதலே இவருக்கு நடனத்தின் மீது அலாதி பிரியம். இவர் திரைப்படங்களில் மட்டுமன்றி பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கின்றார்.

இவர் தமிழில் மட்டுமன்றி தெலுங்கிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் இவரின் நடிப்பில் சமீபத்தில் 'கார்கி' என்ற படம் வெளியாகி இருக்கின்றது. இதனைத் தொடர்ந்தும் சில படங்களில் கமிட்டாகி இருக்கின்றார்.

இவர் படங்களில் மட்டுமன்றி போட்டோ ஷூட்களிலும் அதிகளவு ஆர்வம் கொண்டவர். அடிக்கடி புகைப்படங்களை எடுத்து இணையத்தில் பதிவிடுவது வழக்கம். இந்த வகையில் இவர் தற்போதும் மஞ்சள் நிற உடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றார். இதனைப் பார்த்த சாய் பல்லவி ரசிகர்கள் "இவ்ளோ அழகாக இருக்கீங்களே எப்பிடீங்க..?" என செல்லமாகக் கேட்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement