• Oct 09 2024

தனுஷ், ஐஸ்வர்யாவின் மூத்த மகன் யாத்ராவா இது?-கிடுகிடுவென இவ்வளவு உயரமாக வளர்ந்திட்டாரே?- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த ஆண்டு பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர். அதன்பின் இருவரும் தங்களது கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். மகன்கள் இருவரும் தாய் ஐஸ்வர்யாவுடன் உள்ளனர். இருப்பினும் தன்னுடைய அப்பாவையும் அடிக்கடி சென்று பார்த்து வருகின்றனர்.

தனுஷைப் பிரிந்ததைத் தொடர்ந்து ஐஸ்வர்யா இயக்குநர் பணியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். அதன்படி தற்பொழுது லால் சலாம் படத்தினை இயக்கி வருகின்றார்.இப்படத்தின் ஷுட்டிங் தீவிரமாக நடந்து வருகின்றது.


இந்த நிலையில் ஐஸ்வர்யாவின் மூத்த மகனான யாத்ரா தன்னுடைய அப்பாவான தனுஷின்  டிசர்ட்டே போட்டுக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்து விட்டார். அந்த வகையில் ஐஸ்வர்யா தற்பொழுது ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.அதில் தனது மகன் எப்படி கிடுகிடுவென வளர்ந்து விட்டான் பாருங்க என பதிவிட்டுள்ளார்.


யாத்ராவை பார்த்த ரசிகர்கள் அப்படியே தனுஷ் மற்றும் ரஜினிகாந்தின் சாயல் அப்படியே யாத்ராவுக்கு இருக்கிறது என கமெண்ட் போட்டு வருகின்றனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் இருந்து புது ஹீரோ உருவாகி விட்டார் என்றும் கூடிய விரைவிலேயே தனது மகனை தனுஷ் இயக்குவாரா? அல்லது அம்மா ஐஸ்வர்யா இயக்குவாரா? என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement