• May 06 2024

நடிகை ஸ்ரீதேவி இறந்ததற்கு இத்தனை கோடி பணம் தான் காரணமா?- நீண்ட நாளுக்கு பிறகுவெளிவந்த ரகசியம்

stella / 9 months ago

Advertisement

Listen News!

50 ஆண்டுகளாக 5 மொழியில் திரைத்துறையை கலக்கியவர் ஸ்ரீதேவி. 1963ம் ஆண்டு சிவகாசியில் உள்ள மீனாம்பட்டி கிராமத்தில் பிறந்த ஸ்ரீதேவி, தனது 4 வயதில் கந்தன் கருணை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1976-ஆம் ஆண்டு மூன்று முடிச்சு என்ற படத்தில் 13 வயதில் கதாநாயகியாக அறிமுகமானார்.

 இதைத் தொடர்ந்து ரஜினி, கமல் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்தார். இருவருடனும் இவர் நடித்த படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன. தெற்கில் பிறந்து வடக்கில் கொடி நாட்டியவர் ஸ்ரீதேவி. தென்னிந்திய ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த ஸ்ரீதேவி, 2018ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி துபாயில் மரணமடைந்தார். 


 மொத்தமாக 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் முதலில் மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்டது. பின்னர் குளியல் தொட்டியில் விழுந்து இறந்துவிட்டதாக செய்திகள் வெளியானது.இது குறித்து அரசியல் விமர்சகர் கந்தராஜ் கூறுகையில், குளியல் தொட்டியில் விழுந்து உயிரிழந்ததாக கூறுவதை யாராவது நம்புவார்களா? அது அப்பட்டமான பொய். போனி கபூர் ஸ்ரீதேவியை பணத்திற்காக தான் திருமணம் செய்துகொண்டார்.

இருவருக்கும் வயது வித்யாசமும் அதிகம், போனி கபூருக்கு அப்போதே பெரிய மகன் இருந்தார். கிட்டத்தட்ட ஸ்ரீதேவிக்கும், அவரது மூத்த மகனுக்கும் ஒரே வயது என்றே கூறலாம். ஸ்ரீதேவி மரணத்தில் நிச்சயமாக பல மர்மங்கள் உள்ளது. ஸ்ரீதேவி திருமணத்திற்கு காரணமே அவரின் பணம் தான், அதே போல அவரின் மரணத்திற்கு காரணமும் பணம் தான்.


மேலும் ஸ்ரீதேவி பெயரில் ரூ.200 கோடிக்கு இன்சூரன்ஸ் இருந்ததாக பல தகவல்கள் வெளியானது என்றும், போனி கபூர் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர், அதனால் தான் அவர் தப்பித்து விட்டார் என்றும்  டாக்டர் கந்தராஜ் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement