• Apr 27 2024

நடிகை கஸ்தூரியின் மகனா இது...வெளியான புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு,கன்னடம் போன்ற பல மொழிகளிலும் கொடி கட்டிப் பறந்திருக்கின்றார். அதுமட்டுமல்லாது 1992 இல் 'மிஸ் மெட்ராஸ்' அழகிப் போட்டியில் பட்டம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இவர் நடிப்பில் உருவான படங்களில் 'ஆத்தா உன் கோவிலிலே, ராசாத்தி வரும் நாள், சின்னவர், செந்தமிழ்ப் பாட்டு, அமைதிப்படை' போன்ற பல படங்கள் இன்றும் நம்மால் மறக்க முடியாது. தமிழ் சினிமா ரசிகர்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்த கஸ்தூரி 'சக்கரவர்த்தி' என்ற படத்தின் மூலம் மலையாளத்திலும் கால் பதித்திருக்கின்றார்.


இவ்வாறாக பல மொழிப் படங்களிலும் மாஸ் காட்டி வந்த கஸ்தூரி விஜய் டீவியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் சீசன் 3 இலும் போட்டியாளராக களமிறங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக அனைத்துத் துறைகளிலும் சாதனை நிலை நாட்டி வருகின்ற இவர் சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருபவர்.

அதில் எப்போதும் தனது புகைப்படங்கள், மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். இந்நிலையில் தற்போது அவரின் மகனோடு சேர்ந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்...







Advertisement

Advertisement

Advertisement