• May 04 2024

புரொமோஷனிற்காக விக்ரம் அணிந்த வாட்ச் இத்தனை லட்சமா? வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குநராக திகழ்பவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி, ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

 மேலும், இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி இருந்தது.இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்து இருக்கிறது. 

எனினும் அதற்காக படத்தில் நடித்த முக்கிய பிரபலங்கள் தொடர்ந்து புரொமோஷன் செய்த வண்ணம் உள்ளனர்.

ஒவ்வொரு இடத்திலும் மிகவும் ஜாலியாக படம் குறித்து சுவாரஸ்யமான விஷயங்களை கூறி நல்ல விதத்தில் புரொமோட் செய்கிறார்கள்.

எனினும் தற்போது பொன்னியின் செல்வன் 2 புரொமோஷன் போது விக்ரம் அணிந்திருந்த வாட்ச் ரசிகர்களிடம் அதிக ஈர்க்கப்பட்டுள்ளது.



அந்த வாட்ச் சுவிட்சர்லாந்தின் ஹியூப்லோட் என்கிற பிராண்ட் வாட்ச் தான் அது. Big Bang Meca-10 என்கிற வெர்ஷனை சேர்ந்த இந்த வாட்ச்சின் விலை இந்திய மதிப்பில் சுமார் 21 லட்சத்து 29 ஆயிரத்து 700 ரூபாய் என்கின்றனர்.

இந்த வாட்ச் விலை கேட்டு ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர் என்றே கூறலாம்.


Advertisement

Advertisement

Advertisement